sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 29, 2025 ,புரட்டாசி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

விளையாட்டு

/

பிற விளையாட்டு

/

உலக விளையாட்டு செய்திகள்

/

உலக விளையாட்டு செய்திகள்

உலக விளையாட்டு செய்திகள்

உலக விளையாட்டு செய்திகள்


ADDED : செப் 22, 2025 10:34 PM

Google News

ADDED : செப் 22, 2025 10:34 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காலிறுதியில் பல்கேரியா

பாசே: பிலிப்பைன்சில் நடக்கும் உலக வாலிபால் சாம்பியன்ஷிப் 'ரவுண்டு-16' போட்டியில் பல்கேரிய அணி 3-0 (25-19, 25-23, 25-13) என்ற கணக்கில் போர்ச்சுகல் அணியை வீழ்த்தியது. மற்றொரு போட்டியில் பெல்ஜியம் அணி 3-0 என பின்லாந்தை வென்றது.

எகிப்து 'சாம்பியன்'

ஓரன்: அல்ஜீரியாவில் நடந்த ஆப்ரிக்க பெண்கள் யூத் ஹேண்ட்பால் சாம்பியன்ஷிப் பைனலில் துனிசியா, எகிப்து அணிகள் மோதின. இதில் எகிப்து அணி 33-21 என வெற்றி பெற்று, 6வது முறையாக கோப்பை வென்றது. கினியா அணி 18-11 என, அங்கோலாவை வீழ்த்தி வெண்கலம் வென்றது.

ஆஸ்திரேலியா அசத்தல்

செரம்பான்: மலேசியாவில் நடக்கும் பெண்களுக்கான ஆசிய கோப்பை (16 வயது), 'டிவிசன்-ஏ' கூடைப்பந்து லீக் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 123-42 (33-12, 29-10, 32-10, 29-10) என பிலிப்பைன்சை வீழ்த்தியது. சீன தைபே அணி 88-83 என தென் கொரியாவை தோற்கடித்தது.

ஈரான் 'ஹாட்ரிக்'

அம்மான்: ஜோர்டானில் நடக்கும் ஆசிய ஹேண்ட்பால் சாம்பியன்ஷிப் (17 வயது) லீக் போட்டியில் ஈரான், கத்தார் அணிகள் மோதின. இதில் ஈரான் அணி 46-25 என வென்றது. ஏற்கனவே குவைத், ஜோர்டானை வென்ற ஈரான், 'ஹாட்ரிக்' வெற்றியுடன் அரையிறுதிக்குள் நுழைந்தது.

எக்ஸ்டிராஸ்

* மலேசியாவில் நடக்கவுள்ள 21 வயதுக்குட்பட்டோருக்கான 'சுல்தான் ஆப் ஜோகர்' கோப்பை ஹாக்கி தொடரில் (அக். 11-18) பங்கேற்கும் இந்திய அணிக்கு கேப்டனாக ரோகித் நியமிக்கப்பட்டார்.

* அடுத்த ஆண்டு நடக்கவுள்ள ஹாக்கி இந்தியா லீக் தொடருக்கான வீரர், வீராங்கனைகள் 'மினி' ஏலம் வரும் செப். 24ல் டில்லியில் நடக்கவுள்ளது. இதில் ராஞ்சி அணி அறிமுகமாகின்றது.

* கோவாவில் நடக்கவுள்ள உலக கோப்பை செஸ் தொடரில் (அக். 30 - நவ. 27) இந்திய வீராங்கனை திவ்யா தேஷ்முக்கிற்கு 'வைல்டு கார்டு' சிறப்பு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us