/
செய்திகள்
/
விளையாட்டு
/
பிற விளையாட்டு
/
தமிழகத்தின் நந்தினி முதலிடம்: 100 மீ., தடை ஓட்டத்தில்
/
தமிழகத்தின் நந்தினி முதலிடம்: 100 மீ., தடை ஓட்டத்தில்
தமிழகத்தின் நந்தினி முதலிடம்: 100 மீ., தடை ஓட்டத்தில்
தமிழகத்தின் நந்தினி முதலிடம்: 100 மீ., தடை ஓட்டத்தில்
ADDED : செப் 28, 2025 11:20 PM

ராஞ்சி: தேசிய தடகளத்தில் தமிழகத்தின் நந்தினி (100 மீ., தடை ஓட்டம்), கோபிகா (உயரம் தாண்டுதல்) தங்கம் வென்றனர்.
ஜார்க்கண்ட் தலைநகர் ராஞ்சியில், தேசிய ஓபன் தடகள சாம்பியன்ஷிப் 64வது சீசன் நடக்கிறது. பெண்களுக்கான 100 மீ., தடை தாண்டும் ஓட்டத்தின் (83.8 செ.மீ.,) பைனலில், இலக்கை 13.57 வினாடியில் கடந்த தமிழகத்தின் நந்தினி முதலிடம் பிடித்து தங்கத்தை தட்டிச் சென்றார். ரயில்வேயின் மவுமிதா (13.84 வினாடி), கர்நாடகாவின் ஷ்ரேயா (13.91) வெள்ளி, வெண்கலம் வென்றனர்.
பெண்களுக்கான உயரம் தாண்டுதல் பைனலில் அதிகபட்சமாக 1.79 மீ., தாண்டிய தமிழகத்தின் கோபிகா தங்கம் வென்றார். அடுத்த இரு இடங்களை ரயில்வேயின் சுப்ரியா (1.73 மீ.,), உ.பி.,யின் ரீத் ரத்தோர் (1.73) பிடித்தனர்.
தனுஷ் 'வெண்கலம்': ஆண்களுக்கான 110 மீ., தடை தாண்டும் ஓட்டத்தின் பைனலில் பந்தய துாரத்தை 14.39 வினாடியில் கடந்த தமிழகத்தின் தனுஷ் ஆதித்தன் 3வது இடம் பிடித்து வெண்கலம் வென்றார். தங்கம், வெள்ளிப் பதக்கத்தை முறையே ரயில்வேயின் மானவ் (13.97 வினாடி), கர்நாடகாவின் கிருஷிக் (14.02) கைப்பற்றினர். மற்றொரு தமிழக வீரர் ரித்திக் (14.61 வினாடி) 5வது இடம் பிடித்தார்.
கலப்பு அணிகளுக்கான 4x400 மீ., தொடர் ஓட்டத்தின் பைனலில் யோகேஷ், சூரஜ், ஹர்ஷிதா, தேசிகா அடங்கிய தமிழக அணி (3 நிமிடம், 25.46 வினாடி) 3வது இடம் பிடித்து வெண்கலம் வென்றது.
பெண்களுக்கான 100 மீ., ஓட்டத்தின் பைனலில் தமிழகத்தின் அபினயா (11.67 வினாடி) வெண்கலம் வென்றார். கர்நாடகாவின் ஸ்நேகா (11.62), மகாராஷ்டிராவின் சுதேஷ்னா (11.64) வெள்ளி, வெண்கலம் கைப்பற்றினர்.