தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/விளையாட்டு/பிற விளையாட்டு/ஜப்பான் வீரர் ஓய்வு

ஜப்பான் வீரர் ஓய்வு

ஜப்பான் வீரர் ஓய்வு


ADDED : மே 01, 2026 10:27 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 01, 2026 10:27 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

டோக்கியோ: ஜப்பான் டென்னிஸ் வீரர் கெய் நிஷிகோரி 36. கடந்த 2007ல் ஏ.டி.பி., அரங்கில் காலடி வைத்தார். யு.எஸ்., ஓபனில் (2014) பைனல் வரை சென்ற இவர், ரியோ ஒலிம்பிக் (2016) ஒற்றையரில் வெண்கலம் வென்றார். வலது தோள்பட்டை வலியால், இந்த ஆண்டு ஆஸ்திரேலிய ஓபன் நிஷிகோரி பங்கேற்கவில்லை. ஏ.டி.பி., ஒற்றையர் பிரிவில் இதுவரை 12 பட்டம் கைப்பற்றிய நிஷிகோரி, இந்த ஆண்டு இறுதியில் டென்னிஸ் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.

ஆஸ்டன் வில்லா ஏமாற்றம்

நாட்டிங்காம்: இங்கிலாந்தின் நாட்டிங்காம் நகரில் நடந்த ஐரோப்பா லீக் கால்பந்து அரையிறுதிக்கான முதல் போட்டியில் ஆஸ்டன் வில்லா, நாட்டிங்காம் பாரெஸ்ட் அணிகள் மோதின. கிறிஸ் உட் ஒரு கோல் அடித்து கைகொடுக்க நாட்டிங்காம் அணி 1-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. போர்ச்சுகலில் நடந்த மற்றொரு அரையிறுதியில் பிராகா (போர்ச்சுகல்), பிராய்பர்க் (ஜெர்மனி) அணிகள் மோதின. இதில் பிராகா அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

எக்ஸ்டிராஸ்

* ஐதராபாத்தில் வரும் ஜூன் 16-28ல், ரக்பி பிரிமியர் லீக் 2வது சீசன் நடக்கவுள்ளது. இதில் 6 அணிகள் பங்கேற்கின்றன.

* டில்லியில் நடக்கும் ஐ.டி.எப்., டென்னிஸ் தொடருக்கான காலிறுதியில் இந்தியாவின் ஜீல் தேசாய் 4-6, 4-6 என, சகவீராங்கனை ஷ்ருதியிடம் தோல்வியடைந்தார்.

* ஒருநாள் போட்டிக்கான ஐ.சி.சி., தரவரிசையில் 'நடப்பு உலக சாம்பியன்' இந்திய பெண்கள் அணி (124 புள்ளி) 3வது இடத்தில் உள்ளது. இங்கிலாந்து அணி (128) 2வது இடத்துக்கு முன்னேறியது. முதலிடத்தில் ஆஸ்திரேலியா (163) நீடிக்கிறது.

* ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில், இந்திய ஓபன் உள்ளரங்கு தடகள போட்டிகள் இன்று துவங்குகின்றன. இதில் 'போல் வால்ட்' போட்டியில் தமிழகத்தின் பரனிகா, ம.பி.,யின் தேவ் குமார் மீனா பங்கேற்கின்றனர்.

* கஜகஸ்தானில், உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் ('ஷாட்கன்') தொடர் இன்று துவங்குகிறது. இதில் 42 நாடுகளை சேர்ந்த 284 பேர் பங்கேற்கின்றனர். இந்தியா சார்பில் ரைசா தில்லான், மைராஜ் அகமது கான், அனந்த்ஜீத் சிங் உள்ளிட்ட 12 பேர் களமிறங்குகின்றனர்.

* 'டி-20' உலக கோப்பை தொடருக்கு தயாராகும் விதமாக கனடா கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக இந்தியாவின் மான்டி தேசாய் 51, நியமிக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே இவர், 2019ல் கனடா அணிக்கு பயிற்சியாளராக இருந்துள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us