உள்ளடக்கத்திற்கு செல்ல

ADDED : ஜூன் 08, 2026 10:56 PM

அ நிறம் | அளவு
தாஷ்கென்ட்: உஸ்பெகிஸ்தான் செஸ் இரண்டாவது சுற்றில் அர்ஜுன் வெற்றி பெற்றார்.
உஸ்பெகிஸ்தானின் தாஷ்கென்ட் நகரில் மூன்றாவது 'உஸ்செஸ்' கோப்பை தொடர் நடக்கிறது. மாஸ்டர்ஸ் பிரிவில் இந்தியாவின் அர்ஜுன் எரிகைசி, விதித் சந்தோஷ் குஜ்ராத்தி உட்பட 10 பேர் பங்கேற்கின்றனர். நேற்று தனது இரண்டாவது சுற்றில் அர்ஜுன், உஸ்பெகிஸ்தானின் நாடிர்பெக்கை சந்தித்தார். வெள்ளை நிற காய்களுடன் விளையாடிய அர்ஜுன், 36வது நகர்த்தலில் வெற்றி பெற்றார்.
மற்றொரு போட்டியில் விதித், ரஷ்யாவின் இயான் நெபோம்னியாட்சியிடம் தோல்வியடைந்தார். இரண்டு சுற்று முடிவில் உஸ்பெகிஸ்தானின் மடமினோவ் (2.0) முதலிடத்தில் உள்ளார். நாடிர்பெக் (1.5), அர்ஜுன் (1.5) அடுத்த இரு இடத்தில் உள்ளனர்.
