ADDED : மே 02, 2026 10:58 PM

அ நிறம் | அளவு
மால்மோ: கிளாசிக் செஸ் தொடரில் அர்ஜுன்-கார்ல்சன் மோதிய போட்டி 'டிரா' ஆனது.
சுவீடனில் மால்மோ நகரில் 'டெபே சீஜ்மான்' கிளாசிக் செஸ் தொடர் நடக்கிறது. ஐந்து முறை உலக சாம்பியன், நார்வே வீரர் கார்ல்சன், இந்தியாவின் அர்ஜுன் எரிகைசி உட்பட 8 பேர் பங்கேற்கின்றனர்.
கடந்த 2025 நார்வே தொடரின் கடைசி சுற்றில் அர்ஜுனிடம் தோற்றார் கார்ல்சன். இதன் பின் கிளாசிக் போட்டிகளில் பங்கேற்காமல் இருந்த கார்ல்சன், 330 நாளுக்குப் பின், மீண்டும் இதில் களமிறங்கினார். இம்முறை முதல் சுற்றில் இருவரும் மோதினர்.
அர்ஜுன் கருப்பு நிற காய்களுடன் விளையாடினார். துவக்கத்தில் இருந்து சமபலத்தில் மோதினர். 36 வது நகர்த்தலில் அர்ஜுன் 'டிரா' செய்தார். மற்றொரு போட்டியில் உஸ்பெகிஸ்தான் வீரர் நாடிர்பெக் அப்துசட்டோரோவ், சீன வீராங்கனை ஜு ஜினெரை வீழ்த்தினார்.
