sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/விளையாட்டு/பிற விளையாட்டு/செஸ்: குகேஷ் மீண்டும் 'டிரா'

செஸ்: குகேஷ் மீண்டும் 'டிரா'

செஸ்: குகேஷ் மீண்டும் 'டிரா'


ADDED : பிப் 01, 2026 11:17 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 01, 2026 11:17 PM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

விஜ்க் ஆன் ஜீ: டாடா ஸ்டீல் செஸ் 12வது சுற்று போட்டியை இந்தியாவின் குகேஷ் 'டிரா' செய்தார்.

நெதர்லாந்தில், டாடா ஸ்டீல் செஸ் தொடரின் 88வது சீசன் நடக்கிறது. இதன் மாஸ்டர்ஸ் பிரிவில் இந்தியாவின் குகேஷ், பிரக்ஞானந்தா, அரவிந்த் சிதம்பரம், அர்ஜுன் எரிகைசி, நெதர்லாந்தின் அனிஷ் கிரி, ஜெர்மனியின் வின்சன்ட் கீமர் உள்ளிட்ட 14 பேர் விளையாடுகின்றனர்.

இதன் 12வது சுற்றில், இந்தியாவின் குகேஷ் (கருப்பு), அமெரிக்காவின் ஹான்ஸ் மோக் நீமன் (வெள்ளை) மோதினர். விறுவிறுப்பான இப்போட்டி 63வது நகர்த்தலில் 'டிரா' ஆனது.

இந்தியாவின் அரவிந்த் சிதம்பரம் (வெள்ளை), நெதர்லாந்தின் அனிஷ் கிரி (கருப்பு) மோதிய மற்றொரு 12வது சுற்று போட்டி 52வது நகர்த்தலில் 'டிரா' ஆனது. இந்தியாவின் பிரக்ஞானந்தா (கருப்பு), உஸ்பெகிஸ்தானின் ஜாவோகிர் சின்டாரோ (வெள்ளை) மோதிய போட்டி 14வது நகர்த்தலில் 'டிரா' ஆனது. இந்தியாவின் அர்ஜுன் (கருப்பு), நெதர்லாந்தின் ஜோர்டான் வான் பாரெஸ்ட் (வெள்ளை) மோதிய போட்டி 36வது நகர்த்தலில் 'டிரா' ஆனது.

இதுவரை நடந்த 12 சுற்றுகளின் முடிவில் உஸ்பெகிஸ்தானின் நாடிர்பெக் (8 புள்ளி), ஜாவோகிர் சின்டாரோ (7.5) முதலிரண்டு இடங்களில் உள்ளனர். இந்தியாவின் குகேஷ் (6 புள்ளி), பிரக்ஞானந்தா (5), அரவிந்த் சிதம்பரம் (4.5), அர்ஜுன் (4.5) முறையே 9, 11, 12, 13வது இடத்தில் உள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us