தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/செய்திகள்/விளையாட்டு/பிற விளையாட்டு/செஸ் 'கிராண்ட்மாஸ்டர்' மயங்க்

செஸ் 'கிராண்ட்மாஸ்டர்' மயங்க்

செஸ் 'கிராண்ட்மாஸ்டர்' மயங்க்


ADDED : மார் 14, 2026 10:38 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 14, 2026 10:38 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுடில்லி: இந்தியாவின் புதிய 'கிராண்ட்மாஸ்டர்' ஆனார் மயங்க்.

இளம் இந்திய செஸ் வீரர் மயங்க் சக்ரவர்த்தி 17. அசாமின் கவுகாத்தியை சேர்ந்த இவர், 2024ல் சர்வதேச மாஸ்டர் பட்டம் வென்றார். சுவீடனில் நடந்த சர்வதேச தொடரில் பங்கேற்ற மயங்க், 8வது சுற்றில் சுவீடன் வீரர் பிலிப் லிண்ட்கிரெனை வீழ்த்தினார். இங்கிலாந்தின் ஜோனா வில்லோவுக்கு எதிரான கடைசி சுற்றை 'டிரா' செய்த மயங்க், 7.0 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்து சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.

'கிராண்ட்மாஸ்டர்' பட்டம் பெறுவதற்கான மூன்றாவது அந்தஸ்தை (2508 'எலோ ரேட்டிங்' புள்ளி) எட்டிய மயங்க், இந்தியாவின் 94வது 'கிராண்ட்மாஸ்டர்' ஆனார். தவிர இவர், வடகிழக்கு பகுதியில் இருந்து 'கிராண்ட்மாஸ்டர்' அந்தஸ்து பெற்ற முதல் இந்தியரானார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us