/
செய்திகள்
/
விளையாட்டு
/
பிற விளையாட்டு
/
'காஸ்ட்லி' வீரர் ஹெண்டர்சன்: ஹாக்கி இந்தியா வீரர்கள் ஏலத்தில்
/
'காஸ்ட்லி' வீரர் ஹெண்டர்சன்: ஹாக்கி இந்தியா வீரர்கள் ஏலத்தில்
'காஸ்ட்லி' வீரர் ஹெண்டர்சன்: ஹாக்கி இந்தியா வீரர்கள் ஏலத்தில்
'காஸ்ட்லி' வீரர் ஹெண்டர்சன்: ஹாக்கி இந்தியா வீரர்கள் ஏலத்தில்
ADDED : செப் 24, 2025 10:21 PM

புதுடில்லி: ஹாக்கி இந்திய லீக் வீரர்கள் ஏலத்தில் ஆஸ்திரேலியாவின் ஹெண்டர்சன், அதிகபட்சமாக ரூ. 42 லட்சத்திற்கு கலிங்கா அணியில் ஒப்பந்தமானார்.
ஹாக்கி இந்தியா லீக் (எச்.ஐ.எல்.,) 7வது சீசன் அடுத்த ஆண்டு நடக்கவுள்ளது. இதற்கான வீரர்கள் 'மினி' ஏலம் நேற்று, டில்லியில் நடந்தது. தமிழகம், 'நடப்பு சாம்பியன்' ஒடிசா, பெங்கால் உள்ளிட்ட 8 அணிகள் வீரர்களை தேர்வு செய்தன. இத்தொடரில் இருந்து உ.பி., அணி விலகியதால், அந்த அணியை எச்.ஐ.எல்., நிர்வாக குழு வழிநடத்துகிறது.
இதில் கலிங்கா லான்சர்ஸ் அணி, ரூ. 42 லட்சத்திற்கு ஆஸ்திரேலியாவின் லியாம் ஹெண்டர்சனை வாங்கியது. இவரை அடுத்து, நெதர்லாந்தின் சான்டர் டி வின்ஜ் (தமிழகம்), ஜெர்மனியின் தீஸ் பிரின்ஸ் (எச்.ஐ.எல்., நிர்வாக குழு) தலா ரூ. 36 லட்சத்திற்கு ஒப்பந்தமாகினர். ஆஸ்திரேலியாவின் கூப்பர் பர்ன்ஸ் ரூ. 34.50 லட்சத்திற்கு கலிங்கா அணியில் இணைந்தார்.
இந்தியா சார்பில் ஜூனியர் கோல் கீப்பர் விவேக் லக்ரா, ரூ. 23 லட்சத்திற்கு பெங்கால் அணியால் வாங்கப்பட்டார். இவர், நேற்றைய ஏலத்தில் அதிக விலைக்கு ஒப்பந்தமான இந்திய வீரரானார். இவரை அடுத்து, இந்தியா சார்பில் ருபிந்தர் பால் சிங் (ரூ. 12 லட்சம், டில்லி), அஜீத் யாதவ் (ரூ. 11.5 லட்சம், எச்.ஐ.எல்., நிர்வாக குழு), அத்ரோகித் எக்கா (ரூ. 11 லட்சம், தமிழகம்) அதிக விலைக்கு ஒப்பந்தமாகினர்.