/
செய்திகள்
/
விளையாட்டு
/
பிற விளையாட்டு
/
அவனி லெஹரா 'தங்கம்': உலக 'பாரா' துப்பாக்கி சுடுதலில்
/
அவனி லெஹரா 'தங்கம்': உலக 'பாரா' துப்பாக்கி சுடுதலில்
அவனி லெஹரா 'தங்கம்': உலக 'பாரா' துப்பாக்கி சுடுதலில்
அவனி லெஹரா 'தங்கம்': உலக 'பாரா' துப்பாக்கி சுடுதலில்
ADDED : நவ 02, 2025 10:57 PM

துபாய்: உலக கோப்பை 'பாரா' துப்பாக்கி சுடுதலில் இந்திய வீராங்கனை அவனி லெஹரா தங்கம் வென்றார்.
துபாயில், மாற்றுத்திறனாளிகளுக்கான 'பாரா' துப்பாக்கி சுடுதல் உலக கோப்பை தொடர் நடக்கிறது. பெண்களுக்கான 10 மீ., 'ஏர் ரைபிள் ஸ்டேன்டிங் எஸ்.எச். 1' பிரிவில் இந்தியாவின் அவனி லெஹரா பங்கேற்றார். தகுதிச் சுற்றில் 626.3 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்தார். அடுத்து நடந்த பைனலில் மீண்டும் அசத்திய அவனி, 249.6 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்து தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றார்.
கலப்பு 50 மீ., 'பிஸ்டல் எஸ்.எச். 1' பிரிவு தகுதிச் சுற்றில் இந்தியாவின் சந்தீப் குமார் (543.6 புள்ளி), ஆகாஷ் (539.11) முதலிரண்டு இடங்களை பிடித்தனர். அடுத்து நடந்த பைனலில் அசத்திய ஆகாஷ், 223.1 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்து தங்கம் வென்றார். மற்றொரு இந்திய வீரர் சந்தீப் (220.5) வெள்ளிப்பதக்கத்தை கைப்பற்றினார். இதன் அணிகள் பிரிவில் சந்தீப் குமார், ஆகாஷ், ருத்ராங்க் ஷ் அடங்கிய இந்திய அணி 1588 புள்ளிகளுடன் வெள்ளி வென்றது. ஈரான் அணி (1598) தங்கத்தை தட்டிச் சென்றது.

