sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/விளையாட்டு/பிற விளையாட்டு/அரையிறுதியில் சிம்ரன்ஜீத் கவுர் * உலக கோப்பை வில்வித்தையில்...

அரையிறுதியில் சிம்ரன்ஜீத் கவுர் * உலக கோப்பை வில்வித்தையில்...

அரையிறுதியில் சிம்ரன்ஜீத் கவுர் * உலக கோப்பை வில்வித்தையில்...


ADDED : மே 08, 2026 10:47 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 08, 2026 10:47 PM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஷாங்காய்: உலக கோப்பை வில்வித்தையில் இந்தியாவின் சிம்ரன்ஜீத் கவுர், சாஹில் அரையிறுதிக்கு முன்னேறினர்.

சீனாவின் ஷாங்காய் நகரில் உலக கோப்பை வில்வித்தை 'ஸ்டேஜ் 2' நடக்கிறது. பெண்கள் தனிநபர் ரிகர்வ் போட்டிகள் நடந்தன. காலிறுதியில் இந்தியாவின் சிம்ரன்ஜீத் கவுர், 6-0 என, சீன தைபேவின் பாங் யு ஜுவை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார்.

இந்தியாவின் தீபிகா குமாரி, நான்காவது சுற்றில் தென் கொரியாவின் காங் சயேயங்கிடம் 4-6 என போராடி தோல்வியடைந்தார். மற்றொரு வீராங்கனை கும்கும், 3-7 என, மெக்சிகோவின் வாலன்சியாவிடம் வீழ்ந்தார்.

ஆண்களுக்கான தனிநபர் காம்பவுண்டு போட்டியில் இந்தியாவின் சாஹில் ஜாதவ், காலிறுதியில் ஆஸ்திரியாவின் நிகோ வியனரை சந்தித்தார். இப்போட்டி 147-147 என சமன் ஆனது. வெற்றியாளரை முடிவு செய்ய நடந்த 'ஷூட் ஆப்பில்' 10-9 என அசத்திய சாஹில், அரையிறுதிக்கு முன்னேறினார்.

இந்தியாவின் குஷால் தலால், டென் மார்க்கின் மார்டின் மோதிய மற்றொரு காலிறுதி, 147-147 என சமனில் முடிந்தது. பின் நடந்த 'ஷூட் ஆப்பில்' குஷால் தலால் தோல்வியடைந்தார்.

ஆதித்தி ஆறுதல்

பெண்கள் காம்பவுண்டு பிரிவு நான்காவது சுற்றில் இந்தியாவின் ஆதித்தி, உலகின் 'நம்பர்-2' வீராங்கனை பிரிட்டனின் எல்லா கிப்சனை 150-147 என வீழ்த்தினார். காலிறுதியில் எஸ்தோனியாவின் ஜாட்மாவிடம், 'ஷூட் ஆப்பில்' வீழ்ந்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us