ADDED : ஏப் 09, 2026 10:57 PM

புயுப்லா: உலக கோப்பை வில்வித்தையில் இந்திய பெண்கள் அணி பைனலுக்கு முன்னேறியது.
மெக்சிகோவில் உலக கோப்பை 'ஸ்டேஜ் 1' வில்வித்தை தொடர் நடக்கிறது. காம்பவுண்டு பிரிவு அணிகளுக்கான போட்டி நடந்தது. பிரகதி, ஜோதி, மதுரா அடங்கிய இந்திய பெண்கள் அணி, அரையிறுதியில் துருக்கியை எதிர்கொண்டது. இதில் இந்திய பெண்கள் அணி 233-230 என்ற கணக்கில் வெற்றி பெற்று, பைனலுக்கு முன்னேறியது.
ஆண்கள் காம்பவுண்டு அணி காலிறுதியில் இந்தியாவின் பிரவின் ஓஜாஸ், அபிஷேக், சாஹில் ராஜேஷ் இடம் பெற்ற அணி, காலிறுதியில் மெக்சிகோவை சந்தித்தது. இந்திய அணி 232-234 என்ற கணக்கில் அதிர்ச்சித் தோல்வியடைந்தது.
பெண்களுக்கான தனிநபர் காம்பவுண்டு பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் மதுரா, 143-141 என பிரிட்டனின் கிரேசை வீழ்த்தினார். மற்றொரு போட்டியில் இந்தியாவின் ஆதித்தி, 146-138 என கிரீசின் சோபியாவை சாய்த்தார்.
