/
செய்திகள்
/
விளையாட்டு
/
கால்பந்து
/
ஆப்கானிஸ்தானை வெல்லுமா இந்தியா * நேஷன்ஸ் கால்பந்து தொடரில்...
/
ஆப்கானிஸ்தானை வெல்லுமா இந்தியா * நேஷன்ஸ் கால்பந்து தொடரில்...
ஆப்கானிஸ்தானை வெல்லுமா இந்தியா * நேஷன்ஸ் கால்பந்து தொடரில்...
ஆப்கானிஸ்தானை வெல்லுமா இந்தியா * நேஷன்ஸ் கால்பந்து தொடரில்...
ADDED : செப் 03, 2025 10:51 PM

ஹிசோர்: மத்திய ஆசிய கால்பந்து சங்கத்தின் (சி.ஏ.எப்.ஏ.,) சார்பில் 'நேஷன்ஸ்' கோப்பை தொடர் தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தானில் நடக்கிறது. 8 அணிகள் இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, போட்டிகள் லீக் முறையில் நடக்கின்றன. இரு பிரிவிலும் முதலிடம் பிடிக்கும் அணிகள் பைனலுக்கு முன்னேறும். இரண்டாவது இடம் பெறும் அணிகள், மூன்றாவது இடத்துக்கான போட்டியில் மோதும்.
உலகத் தரவரிசையில் 133 வது இடத்தில் உள்ள இந்திய அணி 'பி' பிரிவில் இடம் பெற்றுள்ளது. முதல் போட்டியில் தஜிகிஸ்தானை அதன் சொந்தமண்ணில் வீழ்த்தியது. அடுத்து ஈரானுடன் தோற்றது.
இதுவரை நடந்த போட்டி முடிவில் ஈரான் (6 புள்ளி), இந்தியா (3), தஜிகிஸ்தான் (3), ஆப்கானிஸ்தான் (0) அணிகள் 'டாப்-4' இடத்தில் உள்ளன. இன்று கடைசி சுற்று லீக் போட்டி நடக்கிறது. இந்திய அணி, 161 வது இடத்திலுள்ள ஆப்கானிஸ்தானுடன் மோதுகிறது. மற்றொரு போட்டியில் ஈரான், தஜிகிஸ்தானை சந்திக்கிறது. ஈரான் வெற்றி தொடர்ந்தால் 9 புள்ளியுடன் பைனலுக்கு முன்னேறும்.
இந்தியா வென்றால் 6 புள்ளியுடன் இரண்டாவது இடம் பெற்று 3வது இடத்துக்கான போட்டிக்கு தகுதி பெறலாம்.
கேப்டன் விலகல்
இந்நிலையில் இந்திய அணி கேப்டன் சந்தேஷ் ஜின்கன், ஈரானுக்கு எதிரான போட்டியில் முகத்தில் ஏற்பட்ட எலும்பு முறிவு காரணமாக, இத்தொடரில் இருந்து விலகினார். தஜிகிஸ்தான் போட்டியில் கோல் அடித்து வெற்றி பெற்றுத் தந்த இவர் இல்லாதது, அணிக்கு சிக்கல் தரலாம். எனினும் அனுபவ கோல் கீப்பர் குர்பிரீத்சிங் சாந்து, ராகுல் பெக்கே, அன்வர் அலி, சாங்டே உள்ளிட்டோர் கைகொடுத்தால் வெற்றிக்கு முயற்சிக்கலாம்.