/
செய்திகள்
/
விளையாட்டு
/
கால்பந்து
/
கால்பந்து: இந்தியா ஏமாற்றம் * ஆசிய கோப்பை தகுதிச்சுற்றில்...
/
கால்பந்து: இந்தியா ஏமாற்றம் * ஆசிய கோப்பை தகுதிச்சுற்றில்...
கால்பந்து: இந்தியா ஏமாற்றம் * ஆசிய கோப்பை தகுதிச்சுற்றில்...
கால்பந்து: இந்தியா ஏமாற்றம் * ஆசிய கோப்பை தகுதிச்சுற்றில்...
UPDATED : அக் 14, 2025 10:37 PM
ADDED : அக் 13, 2025 11:16 PM

கோவா: சிங்கப்பூர் அணிக்கு எதிரான ஆசிய கோப்பை கால்பந்து தொடர் தகுதிச்சுற்றில் இந்திய அணி 1-2 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்தது.
ஆசிய கோப்பை கால்பந்து தொடர் 2027ல் சவுதி அரேபியாவில் நடக்க உள்ளது. இதற்கான மூன்றாவது கட்ட தகுதிச்சுற்றில் 24 அணிகள் பங்கேற்கின்றன. உலகத் தரவரிசையில் 134 வது இடத்திலுள்ள இந்திய அணி 'சி' பிரிவில் ஹாங்காங், சிங்கப்பூர், வங்கதேசம் அணிகளுடன் இடம் பெற்றுள்ளது.
நேற்று தனது, சொந்தமண்ணில் (கோவா) நடந்த நான்காவது போட்டியில், இந்திய அணி, சிங்கப்பூர் (158) அணியை சந்தித்தது. இதில் வென்றால் மட்டுமே ஆசிய கோப்பை தகுதி வாய்ப்பை தக்க வைக்க முடியும் என்ற இக்கட்டான நிலையில் இந்தியா களமிறங்கியது. 14 வது நிமிடத்தில் இந்திய வீரர் சாங்டே முதல் கோல் அடித்தார்.
44 நிமிடம் சிங்கப்பூர் வீரர் சாங் யங் ஒரு கோல் அடிக்க, முதல் பாதி 1-1 என சமன் ஆனது. இரண்டாவது பாதியில் 58 வது நிமிடம் சாய் யங் மீண்டும் ஒரு கோல் அடித்தார். முடிவில் இந்திய அணி 1-2 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்தது.
4 போட்டியில் 2 'டிரா', 2 தோல்வியடைந்த இந்திய அணி (2), புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்துக்கு தள்ளப்பட்டது. ஆசிய கோப்பை தகுதி வாய்ப்பை இழந்து வெளியேறியது.