sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 16, 2025 ,ஆவணி 31, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

விளையாட்டு

/

கால்பந்து

/

அர்ஜென்டினா, பிரேசில் தோல்வி * உலக கோப்பை கால்பந்து தகுதிச்சுற்றில்...

/

அர்ஜென்டினா, பிரேசில் தோல்வி * உலக கோப்பை கால்பந்து தகுதிச்சுற்றில்...

அர்ஜென்டினா, பிரேசில் தோல்வி * உலக கோப்பை கால்பந்து தகுதிச்சுற்றில்...

அர்ஜென்டினா, பிரேசில் தோல்வி * உலக கோப்பை கால்பந்து தகுதிச்சுற்றில்...


ADDED : செப் 10, 2025 09:25 PM

Google News

ADDED : செப் 10, 2025 09:25 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குவாயத்குல்: உலக கோப்பை கால்பந்து தகுதிச்சுற்றில் அர்ஜென்டினா, பிரேசில் அணிகள் தோல்வியடைந்தன.

'பிபா' உலக கோப்பை கால்பந்து தொடர் அமெரிக்கா, மெக்சிகோ, கனடாவில், 2026, ஜூன் 11-ஜூலை 19ல் நடக்க உள்ளது. 48 அணிகள் பங்கேற்க உள்ளன. இதற்கான தென் அமெரிக்க அணிகளுக்கான தகுதிச்சுற்றில் 10 அணிகள் பங்கேற்றன. இதன் கடைசி, 18வது சுற்று போட்டி நடந்தன. உலகின் 'நம்பர்-1' அணி, நடப்பு சாம்பியன் அர்ஜென்டினா, 25வது இடத்திலுள்ள ஈகுவடாரை அதன் சொந்தமண்ணில் சந்தித்தது.

மெஸ்சி விளையாடாத நிலையில் முதல் பாதி 'ஸ்டாப்பேஜ்' நேரத்தில் ஈகுவடார் வீரர் வாலன்சியா (45+13) 'பெனால்டி' வாய்ப்பில் கோல் அடித்தார். முடிவில் அர்ஜென்டினா அணி 0-1 என அதிர்ச்சி தோல்வி அடைந்தது.

பிரேசில் ஏமாற்றம்

மற்றொரு போட்டியில் உலகின் 'நம்பர்-5' பிரேசில் அணி, 78 வது இடத்திலுள்ள பொலிவியாவை அதன் சொந்த மண்ணில் எதிர்கொண்டது. பொலிவிய வீரர் டெர்செரஸ் (45+4), 'பெனால்டி' வாய்ப்பில் கோல் அடிக்க, பிரேசில் அணி 0-1 என தோல்வியடைந்தது. சிலி, உருகுவே மோதிய போட்டி கோல் எதுவுமின்றி 'டிரா' ஆனது.

ஆறு அணிகள்

தென் அமெரிக்க தகுதிச்சுற்று முடிவில் அர்ஜென்டினா (38 புள்ளி), ஈகுவடார் (29), கொலம்பியா (28), உருகுவே (28), பிரேசில் (28), பாராகுவே (28) என 'டாப்-6' அணிகள் உலக கோப்பை தொடருக்கு தகுதி பெற்றன. 7வது இடம் பெற்ற பொலிவியா (20), 'பிளே ஆப்' சுற்றில் பங்கேற்கும்.

போர்ச்சுகல் வெற்றி

ஐரோப்பிய அணிகளுக்கான தகுதிச்சுற்றில் ரொனால்டோவின் போர்ச்சுகல் அணி, 3-2 என்ற கோல் கணக்கில் ஹங்கேரியை வீழ்த்தியது. போர்ச்சுகல் அணிக்கு சில்வா (36வது நிமிடம்), ரொனால்டோ (58), கேன்செலோ (86) தலா ஒரு கோல் அடித்தனர். ஹங்கேரி சார்பில் வார்கா (21, 84) 2 கோல் அடித்தார். மற்றொரு போட்டியில் பிரான்ஸ் அணி 2-1 என ஐஸ்லாந்தை வென்றது.






      Dinamalar
      Follow us