/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
ஜிம்பாப்வே அணி அசத்தல் வெற்றி: நமீபியாவை வீழ்த்தியது
/
ஜிம்பாப்வே அணி அசத்தல் வெற்றி: நமீபியாவை வீழ்த்தியது
ஜிம்பாப்வே அணி அசத்தல் வெற்றி: நமீபியாவை வீழ்த்தியது
ஜிம்பாப்வே அணி அசத்தல் வெற்றி: நமீபியாவை வீழ்த்தியது
ADDED : செப் 15, 2025 10:21 PM

புலவாயோ: முதல் 'டி-20' போட்டியில் அசத்திய ஜிம்பாப்வே அணி 33 ரன் வித்தியாசத்தில் நமீபியாவை வீழ்த்தியது.
ஜிம்பாப்வே சென்றுள்ள நமீபியா அணி, மூன்று போட்டிகள் கொண்ட 'டி-20' தொடரில் பங்கேற்கிறது. புலவாயோவில் முதல் போட்டி நடந்தது. 'டாஸ்' வென்ற நமீபியா 'பீல்டிங்' தேர்வு செய்தது.
ஜிம்பாப்வே அணிக்கு பிரையன் பென்னட், மருமணி ஜோடி நல்ல துவக்கம் கொடுத்தது. இருவரும் அரைசதம் விளாசினர். முதல் விக்கெட்டுக்கு 124 ரன் சேர்த்த போது மருமணி (62) அவுட்டானார். அபாரமாக ஆடிய பென்னட், 51 பந்தில், 94 ரன் (4 சிக்சர், 8 பவுண்டரி) குவித்தார். ரியான் பர்ல் (22), கேப்டன் சிக்கந்தர் ராஜா (23*) கைகொடுத்தனர். ஜிம்பாப்வே அணி 20 ஓவரில், 3 விக்கெட்டுக்கு 211 ரன் எடுத்தது.
கடின இலக்கை விரட்டிய நமீபியா அணிக்கு ஜான் நிக்கோல் லோப்டி-ஈடன் (38), ஜேன் கிரீன் (33), கேப்டன் எராஸ்மஸ் (26) ஆறுதல் தந்தனர். நமீபியா அணி 20 ஓவரில், 7 விக்கெட்டுக்கு 178 ரன் மட்டும் எடுத்து தோல்வியடைந்தது. ஆட்ட நாயகன் விருதை பென்னட் கைப்பற்றினார். ஜிம்பாப்வே அணி 1-0 என முன்னிலை பெற்றது.