ADDED : மே 18, 2026 09:25 PM

புதுடில்லி: ராஜஸ்தானுக்கு எதிரான போட்டியில்
'வேகத்தில்' மிரட்டிய டில்லியின் மிட்சல் ஸ்டார்க், 4 விக்கெட் சாய்த்து
ஆட்ட நாயகன் விருது வென்றார்.
டில்லி அணியின் தலைமை பயிற்சியாளர் ஹேமங்
பதானி கூறுகையில், ''விளையாட்டு துறையில் சிறந்த 'ரோல் மாடலாக' மிட்சல்
ஸ்டார்க் திகழ்கிறார். இதற்கு, அவரது உழைப்பு, போட்டிக்கு முன் தயாராகும்
விதம், போட்டியில் செயல்படுத்தும் திட்டம், பயிற்சி முறை முக்கிய காரணம்.
இவர் எப்போதும் சக வீரர்களிடம் எப்படி பவுலிங் செய்வது குறித்து ஆலோசனை
செய்வார்,'' என்றார்.
ராஜஸ்தானுக்கு தகுதி
புதுடில்லி: டில்லியில் நடந்த கிரிக்கெட் லீக் போட்டியில் ராஜஸ்தான் அணி, 5 விக்கெட் வித்தியாசத்தில் டில்லியிடம் தோல்வியடைந்தது. மீதமுள்ள 2 போட்டியிலும் வெற்றி பெற்றால் மட்டுமே 'பிளே-ஆப்' சுற்றுக்கான வாய்ப்பை ராஜஸ்தான் அணி தக்கவைக்க முடியும்.
ராஜஸ்தான் அணியின் பேட்டிங் பயிற்சியாளர் விக்ரம் ரத்தோர் கூறுகையில், ''முழுத்திறமையை வெளிப்படுத்தினால், எந்த ஒரு அணியையும் வீழ்த்த முடியும். இதற்கான தகுதி, திறமை ராஜஸ்தான் அணி வீரர்களிடம் உள்ளது,'' என்றார்.
