/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
ஷமர் ஜோசப் விலகல் * வெ.இண்டீஸ் அணிக்கு பின்னடைவு
/
ஷமர் ஜோசப் விலகல் * வெ.இண்டீஸ் அணிக்கு பின்னடைவு
ADDED : செப் 26, 2025 10:31 PM

புதுடில்லி: இந்தியா வரவுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி, இரண்டு போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் அக். 2ல் ஆமதாபாத்தில் துவங்குகிறது. இரண்டாவது டெஸ்ட், அக். 10-14ல் டில்லியில் நடக்கவுள்ளது. இத்தொடருக்கான வெஸ்ட் இண்டீஸ் அணியில் இருந்து வேகப்பந்து வீச்சாளர் ஷமர் ஜோசப் 26, காயம் காரணமாக விலகினார்.
கடந்த 2024, ஜனவரில் ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் அறிமுகம் ஆன இவர், 11 போட்டியில் 51 விக்கெட் வீழ்த்தியுள்ளார். மணிக்கு 150 கி.மீ.,க்கும் மேலான வேகத்தில் பந்துவீசும் ஷமர் இல்லாதது வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு இழப்பாக அமையும். இவருக்குப் பதில் வேகப்பந்து வீச்சு ஆல் ரவுண்டர் ஜோஹன் லேன் 22, சேர்க்கப்பட்டார்.
அணி விபரம்: ராஸ்டன் சேஸ் (கேப்டன்), வாரிகன் (துணைக் கேப்டன்), கெவ்லன் ஆண்டர்சன், அலிக் அதானஸ், ஜான் கேம்ப்பெல், டகநரைன் சந்தர்பால், ஜஸ்டின் கிரீவ்ஸ், ஷாய் ஹோப், டெவின் இம்லச், ஜோஹன் லேன், அல்ஜாரி ஜோசப், பிரண்டன் கிங், ஆண்டர்சன் பிலிப். காரி பியர்ரே, ஜேடன் சீலஸ்.