/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
அம்பயர் டிக்கி பேர்டு காலமானார்
/
அம்பயர் டிக்கி பேர்டு காலமானார்
ADDED : செப் 23, 2025 10:50 PM

லண்டன்: இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரரும் அம்பயருமான ஹரால்டு டெனிஸ் பேர்டு (செல்லமாக 'டிக்கி' பேர்டு) 92, காலமானார்.
யார்க்சயர் கவுன்டி அணிக்காக 93 முதல் தர போட்டிகளில் 3314 ரன் (1956-1964) எடுத்தார். பின் 1973 முதல் 1996 வரை, 66 டெஸ்ட், 69 ஒருநாள் போட்டிகளில் அம்பயராக செயல்பட்டார்.
காலை 6:00 மணிக்கே மைதானம் வந்து விடும் இவரது துல்லியமான முடிவுகள், தனித்துவமான செயல்களால் ரசிகர்களால் கவரப்பட்டார்.
இங்கிலாந்துக்கு எதிரான 1974 ஓல்டு டிரபோர்டு டெஸ்டில் இந்திய வீரர் கவாஸ்கரின் தலைமுடி, அடிக்கடி முகத்தில் விழுந்து கண்களை மறைத்தது. இதைப் பார்த்த டிக்கி பேர்டு, பந்தில் பிரியும் நுாலை வெட்ட வைத்திருந்த கத்தரியால், கவாஸ்கரின் தலைமுடியை வெட்டி விட்டார்.
1996ல் டிராவிட், கங்குலி அறிமுகம் ஆன, லார்ட்ஸ் டெஸ்ட் (எதிர்-இங்கிலாந்து), இவரது கடைசி போட்டியாக அமைந்தது.
'வயது மூப்பு காரணமாக தனது வீட்டில் டிக்கி பேர்டு மரணம் அடைந்தார்,' என யார்க்சயர் அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
கவாஸ்கர் வெளியிட்ட இரங்கல் செய்தியில்,' ஓவர்களுக்கு இடையில் அல்லது பந்துகளுக்கு இடையில் வீரர்களிடம் அரட்டை அடிப்பார் டிக்கி பேர்டு. அனைவரும் அவரை நேசித்தனர். கிரிக்கெட் ஒரு சிறந்த அம்பயரை இழந்து விட்டது,'' என்றார்.