கெய்லை முந்திய போலார்டு * 'டி-20' கிரிக்கெட்டில் அதிக ரன்
கெய்லை முந்திய போலார்டு * 'டி-20' கிரிக்கெட்டில் அதிக ரன்
ADDED : ஜூன் 22, 2026 11:44 PM

டல்லாஸ்: 'டி-20' கிரிக்கெட்டில் அதிக ரன் எடுத்த வீரர் என கெய்லை முந்தி, புதிய சாதனை படைத்தார் போலார்டு.
வெஸ்ட் இண்டீஸ் முன்னாள் வீரர் போலார்டு 39. உலகின் பல்வேறு 'டி-20' லீக் தொடர்களில் விளையாடி வருகிறார். அமெரிக்காவில் நடக்கும் மேஜர் லீக் தொடரில் நியூயார்க் அணிக்காக விளையாடுகிறார். டல்லாசில் நடந்த போட்டியில் வாஷிங்டன், நியூயார்க் அணிகள் மோதின.
இப்போட்டியில் நியூயார்க் அணி (215/5), வாஷிங்டனிடம் (245/5) 30 ரன் வித்தியாசத்தில் வீழ்ந்தது. இதில் நியூயார்க் பேட்டர் போலார்டு, 56 பந்தில் 100 ரன் விளாசினார். இதையடுத்து 'டி-20' கிரிக்கெட்டில் அதிக ரன் எடுத்த கெய்லின் 12 ஆண்டு சாதனையை தகர்த்தார். இவர் 737 போட்டியில் 14,589 ரன் குவித்துள்ளார். 463 போட்டியில், 14,562 ரன் எடுத்திருந்த கெய்ல் இரண்டாவது இடத்துக்கு தள்ளப்பட்டார்.
மன்னிப்பு
போலார்டு கூறுகையில், ''மூன்று வித கிரிக்கெட்டில் பல்வேறு சாதனை நிகழ்த்தியவர் வெஸ்ட் இண்டீசின் கெய்ல். எங்களது நீண்ட கால முன்னோடியாக திகழும், அவரை முந்தியது ஒரு 'ஸ்பெஷல்' உணர்வைத் தருகிறது. 'யுனிவர்சல் பாஸ்', என்னை மன்னிக்கவும்,'' என்றார்.
டாப்-6' வீரர்
ஒட்டுமொத்த 'டி-20' கிரிக்கெட்டில் அதிக ரன் எடுத்த 'டாப்-6' வீரர்கள்:
வீரர்/அணி போட்டி ரன் சதம்/அரைசதம்
போலார்டு/வெ/இண்டீஸ் 737 14,589 2/67
கெய்ல்/வெ.இண்டீஸ் 463 14,562 22/88
ஹேல்ஸ்/இங்கிலாந்து 528 14,449 7/92
பட்லர்/இங்கிலாந்து 510 14,371 8/102
வார்னர்/ஆஸி., 439 14,284 10/118
கோலி/இந்தியா 430 14,218 10/110
* இந்தியாவின் ரோகித் (472ல் 12,531, 8/84) 9வது இடத்தில் உள்ளார்.
