தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/செய்திகள்/விளையாட்டு/கிரிக்கெட்/ஸ்மிருதி மந்தனாவுக்கு கவுரவம் * 'டைம்' இதழில் இடம்

ஸ்மிருதி மந்தனாவுக்கு கவுரவம் * 'டைம்' இதழில் இடம்

ஸ்மிருதி மந்தனாவுக்கு கவுரவம் * 'டைம்' இதழில் இடம்


ADDED : ஜூன் 16, 2026 11:34 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 16, 2026 11:34 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நியூயார்க்: அமெரிக்காவில் இருந்து வெளியாகிறது 'டைம்' இதழ். இதன் சார்பில் ஒவ்வொரு ஆண்டும், அரசியல், அறிவியல், கலை உட்பட பல்வேறு பிரிவுகளில் சிறந்து விளங்கும் உலகின் 'டாப்-100' நபர்கள் பட்டியல் வெளியிடப்படும்.

இந்த வரிசையில் விளையாட்டு நட்சத்திரங்கள் பிரிவில் இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் துணைக் கேப்டன் ஸ்மிருதி மந்தனா 29, இடம் பெற்றுள்ளார். இப்பட்டியலில் இடம் பிடித்த ஒரே இந்திய விளையாட்டு நட்சத்திரம் ஆனார். உள்ளூர் ஒருநாள் போட்டியில் இரட்டை சதம், டெஸ்ட், ஒருநாள், 'டி-20' என மூன்று வித கிரிக்கெட்டிலும் சதம் அடித்த முதல் இந்திய வீராங்கனை, பெண்கள் கிரிக்கெட்டில் அதிக சதம் (17) அடித்தவர், சர்வதேச அரங்கில் ஒரே ஆண்டில் 1000 ரன்னுக்கும் மேல் குவித்த முதல் வீராங்கனை என சாதித்துள்ளார். தவிர 2024, 2026ல் பெங்களூரு அணிக்காக பெண்கள் கிரிக்கெட் லீக் தொடரில் கோப்பை வென்று தந்தார்.

ஸ்மிருதி மந்தனா தவிர, போல் வால்ட் போட்டியில் 15 முறை உலக சாதனை படைத்த சுவீடன் வீரர் டுப்ளான்டிஸ், உலக கோப்பை கால்பந்தில் ஆறாவது முறையாக பங்கேற்கும் அர்ஜென்டினாவின் மெஸ்ஸி, போர்ச்சுகலின் ரொனால்டோ, தகுதிச்சுற்றில் (14 போட்டி, 21 கோல்) அதிக கோல் அடித்த நார்வே எர்லிங் ஹாலண்ட், தென் ஆப்ரிக்க கிரிக்கெட் அணி கேப்டன் பவுமா, உலகின் 'நம்பர்-1' டென்னிஸ் வீராங்கனை சபலென்கா (பெலாரஸ்) உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us