/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
இங்கிலாந்து அணி கலக்கல் * நியூசிலாந்தை வீழ்த்தியது
/
இங்கிலாந்து அணி கலக்கல் * நியூசிலாந்தை வீழ்த்தியது
இங்கிலாந்து அணி கலக்கல் * நியூசிலாந்தை வீழ்த்தியது
இங்கிலாந்து அணி கலக்கல் * நியூசிலாந்தை வீழ்த்தியது
ADDED : அக் 20, 2025 08:23 PM

கிறைஸ்ட்சர்ச்: நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது 'டி-20' போட்டியில் இங்கிலாந்து அணி, 65 ரன் வித்தியாசத்தில் கலக்கல் வெற்றி பெற்றது.
நியூசிலாந்து சென்றுள்ள இங்கிலாந்து அணி 3 போட்டி கொண்ட 'டி-20' தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டி மழையால் ரத்தானது. இரண்டாவது போட்டி நேற்று கிறைஸ்ட்சர்ச் நகரில் நடந்தது. 'டாஸ்' வென்ற நியூசிலாந்து அணி கேப்டன் மிட்சல் சான்ட்னர், பீல்டிங் தேர்வு செய்தார்.
சால்ட் அபாரம்
இங்கிலாந்து அணிக்கு பில் சால்ட், பட்லர் (4) ஜோடி சுமார் துவக்கம் தந்தது. பெத்தெல் 24 ரன் எடுத்தார். அடுத்து சால்ட், கேப்டன் ஹாரி புரூக் இணைந்து வேகமாக ரன் சேர்த்தனர். சால்ட் 33 பந்தில் அரைசதம் எட்டினார். இவருக்கு 'கம்பெனி' கொடுத்த புரூக், 22 பந்தில் அரைசதம் அடித்தார்.
மூன்றாவது விக்கெட்டுக்கு 68 பந்தில் 129 ரன் சேர்த்த போது, புரூக் (78 ரன், 35 பந்து) ஜேமிசன் பந்தில் அவுட்டானார். தொடர்ந்து மிரட்டிய ஜேமிசன், சால்ட்டையும் (85 ரன், 56 பந்து) வெளியேற்றினார். இங்கிலாந்து அணி 20 ஓவரில் 236/4 ரன் குவித்தது. கர்ரான் (8), பான்டன் (29) அவுட்டாகாமல் இருந்தனர்.
செய்பெர்ட் ஆறுதல்
கடின இலக்கைத் துரத்திய நியூசிலாந்து அணிக்கு செய்பெர்ட் (39), ராபின்சன் (7) ஜோடி துவக்கம் தந்தது. ரச்சின் (8), மிட்செல் (9), பிரேஸ்வெல் (2) நிலைக்கவில்லை. சாப்மென் 18, ஜிம்மி நீஷம் 17, சான்ட்னர் 36 ரன் எடுத்து திரும்பினர். நியூசிலாந்து அணி 18 ஓவரில் 171 ரன்னில் ஆல் அவுட்டாகி தோல்வியடைந்தது. தொடரில் இங்கிலாந்து 1-0 என முன்னிலை பெற்றது.