தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/விளையாட்டு/கிரிக்கெட்/50வது டெஸ்டில் ரிஷாப் பன்ட் * நாளை ஆப்கானிஸ்தானுடன் மோதல்

50வது டெஸ்டில் ரிஷாப் பன்ட் * நாளை ஆப்கானிஸ்தானுடன் மோதல்

50வது டெஸ்டில் ரிஷாப் பன்ட் * நாளை ஆப்கானிஸ்தானுடன் மோதல்


ADDED : ஜூன் 04, 2026 11:01 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 04, 2026 11:01 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதிய சண்டிகர்: விக்கெட் கீப்பர் பேட்டர் ரிஷாப் பன்ட், தனது 50 வது டெஸ்டில் களமிறங்குகிறார்.

இந்தியா, ஆப்கானிஸ்தான் அணிகள் மோதும் டெஸ்ட் போட்டி, நாளை புதிய சண்டிகரில் உள்ள மஹாராஜா யாதவிந்த்ரா சிங் மைதானத்தில் துவங்க உள்ளது. இதில் சாதிக்க, சுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். விக்கெட் கீப்பராக ரிஷாப் பன்ட் 28, களமிறங்குகிறார்.

சமீபத்திய பிரிமியர் தொடரில் போதிய ரன் எடுக்காதது, அணியை வெற்றி பெறச் செய்ய முடியாதது என பல்வேறு நெருக்கடியுடன் காணப்பட்டார் ரிஷாப். கடைசியில் தோல்விக்கு பொறுப்பேற்று, லக்னோ கேப்டன் பதவியில் இருந்து விலகினார்.

மீண்டு வருவாரா

தற்போது ஆப்கானிஸ்தான் போட்டி, இவருக்கு 50 வது டெஸ்டாக அமைய உள்ளது. இதில் சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளார். ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்ரிக்க மண்ணில் சதம் விளாசிய போல, இவர் அசத்த வேண்டும்.

கடைசியாக தென் ஆப்ரிக்க தொடரில், கவுகாத்தி டெஸ்டில் தேவையற்ற 'ஷாட்டுகளால்' வீணாக அவுட்டாகினார். இம்முறை ரிஷாப், அணுகுமுறையில் மாற்றம் இருக்கும் எனத் தெரிகிறது.

இதுகுறித்து பயிற்சியாளர் காம்பிர், அவரிடம் பேசியுள்ளார். இதனால், பயிற்சியில் சுழற்பந்து வீச்சுகளை மிக கவனமாக எதிர்கொண்டு விளையாடினார். இதுகுறித்து துணை பயிற்சியாளர் ரியான் டென் டஸ்காட்டே கூறியது:

இந்திய அணியின் சீனியர் வீரராக எப்படி நடந்து கொள்ளப் போகிறீர்கள், உங்களது பேட்டிங் எப்படி இருக்கும் என்பது குறித்து, காம்பிர்-ரிஷாப் பேசிக் கொண்டனர். சிறந்த வீரரான ரிஷாப், புரிந்து கொண்டிருப்பார் என நினைக்கிறேன். அவரது திறமையை நாங்கள் குறைத்து மதிப்பிடவில்லை.

வழக்கமான பேட்டிங் ஸ்டைலை மாற்ற வேண்டும் என்றும் நினைக்கவில்லை. ஆனால், போட்டியின் சூழ்நிலைக்கு ஏற்ப, பேட்டிங்கில் மாற்றம் செய்து விளையாடினால் நன்றாக இருக்கும். இதை அவர் பின்பற்றுவார் என நம்புகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

கோலி விலகல்

இந்திய அணி சீனியர் வீரர் கோலி 37. சமீபத்திய கிரிக்கெட் லீக் தொடரில் 675 ரன் குவித்து பெங்களூரு கோப்பை வெல்ல கைகொடுத்தார். டெஸ்ட், சர்வதேச 'டி-20'ல் இருந்து ஓய்வு பெற்ற இவர், 2027 ஒருநாள் உலக கோப்பை தொடரில் பங்கேற்க திட்டமிட்டு வருகிறார். இதற்கேற்ப, வரும் ஆப்கானிஸ்தான் ஒருநாள் தொடரில் பங்கேற்க இருந்தார். தற்போது தொடை பின் பகுதி காயத்தால் இத்தொடரில் இருந்து விலகினார். இவருக்குப் பதில் ருதுராஜ் சேர்க்கப்படலாம்.

அவ்வளவு எளிதல்ல

இந்திய அணி சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் கூறுகையில்,''கடந்த இரு மாதமாக கிரிக்கெட் லீக் தொடரில் விளையாடிய நிலையில், திடீரென டெஸ்ட் போட்டிக்கு ஏற்ப மாற்றிக் கொள்வது அவ்வளவு எளிதல்ல. போதிய கால அவகாசம் தேவைப்படும். அனைவரும் சிறப்பான முறையில் மீண்டு வருவர் என்ற நம்பிக்கை உள்ளது,'' என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us