/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
மத்திய மண்டலம் முன்னிலை: துலீப் டிராபி பைனலில்
/
மத்திய மண்டலம் முன்னிலை: துலீப் டிராபி பைனலில்
ADDED : செப் 13, 2025 09:44 PM

பெங்களூரு: துலீப் டிராபி பைனலில் மத்திய மண்டல அணி முன்னிலை பெற்றது.
பெங்களூருவில் நடக்கும் துலீப் டிராபி கிரிக்கெட் பைனலில் தெற்கு, மத்திய மண்டல அணிகள் விளையாடுகின்றன. தெற்கு மண்டல அணி, முதல் இன்னிங்சில் 149 ரன் எடுத்தது. இரண்டாம் நாள் முடிவில் மத்திய மண்டல அணி 384/5 ரன் எடுத்திருந்தது. ரத்தோட் (137), சரண்ஷ் (47) அவுட்டாகாமல் இருந்தனர்.
மூன்றாம் நாள் ஆட்டத்தில் சரண்ஷ் ஜெயின் (69) அரைசதம் கடந்தார். அபாரமாக ஆடிய யாஷ் ரத்தோட் (194), இரட்டை சதமடிக்கும் வாய்ப்பை இழந்தார். மத்திய மண்டல அணி முதல் இன்னிங்சில் 511 ரன்னுக்கு 'ஆல்-அவுட்' ஆனது. தெற்கு மண்டலம் சார்பில் குர்ஜப்னீத் சிங், அங்கித் சர்மா தலா 4 விக்கெட் கைப்பற்றினர்.
பின் 2வது இன்னிங்சை துவக்கிய தெற்கு மண்டல அணிக்கு தன்மே அகர்வால் (26), மோகித் காலே (38) சுமாரான துவக்கம் கொடுத்தனர். ஆட்டநேர முடிவில் தெற்கு மண்டல அணி 129/2 ரன் எடுத்து, 233 ரன் பின்தங்கி இருந்தது. மத்திய மண்டலம் சார்பில் சரண்ஷ், குல்தீப் சென் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.