/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
மத்திய மண்டலம் அபாரம்: துலீப் டிராபி பைனலில்
/
மத்திய மண்டலம் அபாரம்: துலீப் டிராபி பைனலில்
ADDED : செப் 14, 2025 10:20 PM

பெங்களூரு: துலீப் டிராபி வெல்லும் வாய்ப்பு மத்திய மண்டல அணிக்கு அதிகரித்துள்ளது.
பெங்களூருவில் நடக்கும் துலீப் டிராபி கிரிக்கெட் பைனலின் முதல் இன்னிங்சில் தெற்கு மண்டலம் 149, மத்திய மண்டலம் 511 ரன் எடுத்தன. மூன்றாம் நாள் முடிவில் தெற்கு மண்டல அணி 2வது இன்னிங்சில் 129/2 ரன் எடுத்திருந்தது.
நேற்று, 4ம் நாள் ஆட்டம் நடந்தது. தெற்கு மண்டல அணிக்கு ஸ்மரன் (67), ரிக்கி புய் (45) கைகொடுத்தனர். கேப்டன் முகமது அசாருதீன் (27) நிலைக்கவில்லை. ஏழாவது விக்கெட்டுக்கு 192 ரன் சேர்த்த ஆன்ட்ரி சித்தார்த் (84*), அங்கித் சர்மா (99) ஜோடி, அணிக்கு முன்னிலை பெற்றுத்தந்தது. தெற்கு மண்டல அணி 2வது இன்னிங்சில் 426 ரன்னுக்கு 'ஆல்-அவுட்' ஆனது. மத்திய மண்டலம் சார்பில் குமார் கார்த்திகேயா 4, சரண்ஷ் ஜெயின் 3 விக்கெட் சாய்த்தனர்.
கடைசி நாள் ஆட்டத்தில் வெற்றிக்கு 65 ரன் மட்டும் தேவைப்படுவதால், மத்திய மண்டல அணியின் கோப்பை வாய்ப்பு பிரகாசமடைந்துள்ளது.