/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
மத்திய மண்டலம் 'சாம்பியன்': துலீப் டிராபியில் கலக்கல்
/
மத்திய மண்டலம் 'சாம்பியன்': துலீப் டிராபியில் கலக்கல்
மத்திய மண்டலம் 'சாம்பியன்': துலீப் டிராபியில் கலக்கல்
மத்திய மண்டலம் 'சாம்பியன்': துலீப் டிராபியில் கலக்கல்
ADDED : செப் 15, 2025 10:17 PM

பெங்களூரு: துலீப் டிராபி பைனலில் 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற மத்திய மண்டல அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.
பெங்களூருவில் நடந்த துலீப் டிராபி கிரிக்கெட் பைனலில் தெற்கு, மத்திய மண்டல அணிகள் மோதின. முதல் இன்னிங்சில் தெற்கு மண்டலம் 149, மத்திய மண்டலம் 511 ரன் எடுத்தன. தெற்கு மண்டல அணி 2வது இன்னிங்சில் 426 ரன் எடுத்தது.
கடைசி நாள் ஆட்டத்தில் 65 ரன் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய மத்திய மண்டல அணிக்கு டேனிஷ் மாலேவார் (5), சுபம் சர்மா (8), சரண்ஷ் ஜெயின் (4) ஏமாற்றினர். கேப்டன் ரஜத் படிதர் (13) சோபிக்கவில்லை. பின் இணைந்த அக்சய் வாட்கர் (19*), யாஷ் ரத்தோட் (13*) ஜோடி கைகொடுத்தது.
மத்திய மண்டல அணி 2வது இன்னிங்சில் 4 விக்கெட்டுக்கு 66 ரன் எடுத்து வெற்றி பெற்றது. மத்திய மண்டல அணி 11 ஆண்டுகளுக்கு பின் துலீப் டிராபி வென்றது. கடைசியாக 2014ல் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. தவிர, 7வது முறையாக (1971-72, 1996-97, 1997-98, 1998-99, 2004-05, 2014-15, 2025-26) துலீப் டிராபி வென்றுள்ளது.
ஆட்ட நாயகன் விருதை யாஷ் ரத்தோட் (194 ரன்), தொடர் நாயகன் விருதை சரண்ஷ் ஜெயின் (136 ரன், 16 விக்கெட்) வென்றனர்.