sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 30, 2025 ,புரட்டாசி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

விளையாட்டு

/

கிரிக்கெட்

/

இந்தியாவை சமாளிக்குமா வங்கம்... * ஆசிய கோப்பையில் இன்று 'விறுவிறு'

/

இந்தியாவை சமாளிக்குமா வங்கம்... * ஆசிய கோப்பையில் இன்று 'விறுவிறு'

இந்தியாவை சமாளிக்குமா வங்கம்... * ஆசிய கோப்பையில் இன்று 'விறுவிறு'

இந்தியாவை சமாளிக்குமா வங்கம்... * ஆசிய கோப்பையில் இன்று 'விறுவிறு'

1


ADDED : செப் 23, 2025 11:04 PM

Google News

1

ADDED : செப் 23, 2025 11:04 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

துபாய்: ஆசிய கோப்பை 'சூப்பர்-4' போட்டியில் இன்று இந்தியா, வங்கதேச அணிகள் மோதுகின்றன. இதில் இந்தியா சுலப வெற்றி பெற்று, பைனலுக்கு முன்னேற காத்திருக்கிறது.

ஐக்கிய அரபு எமிரேட்சில் ஆசிய கோப்பை 'டி-20' தொடர் நடக்கிறது. இன்று துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடக்கும் 'சூப்பர்-4' போட்டியில் இந்திய அணி, வங்கதேசத்தை எதிர்கொள்கிறது. இரு அணிகளிலும் தரமான 'ஸ்பின்னர்'கள் இருப்பதால், 'சுழல்' சூறாவளியை எதிர்பார்க்கலாம்.

நீண்ட பேட்டிங்

இந்திய அணி வலுவாக உள்ளது. துவக்கத்தில் அபிஷேக் சர்மா (4 போட்டி 173 ரன்), சுப்மன் கில் (82) விளாசுகின்றனர். அடுத்து கேப்டன் சூர்யகுமார், திலக் வர்மா, 'கீப்பர்' சஞ்சு சாம்சன், 'ஆல்-ரவுண்டர்' ஹர்திக் பாண்ட்யா, ஷிவம் துபே, அக்சர் படேல் என பெரிய பேட்டிங் படை உள்ளது. சுழற்பந்துவீச்சில் திலக் வர்மா தடுமாறுவது பலவீனம்.

'வேகப்புயல்' பும்ரா ரன்களை கட்டுப்படுத்த வேண்டும். ஹர்திக் பாண்ட்யா நம்பிக்கை தருகிறார். 'சுழலில்' வருண் சக்ரவர்த்தி, குல்தீப் யாதவ், அக்சர் படேல் மிரட்டுகின்றனர்.

தொடரும் பதட்டம்

வங்கதேச அணி உள்நாட்டு கலவரத்தால் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் வங்கதேச மண்ணில் நடக்க இருந்த தொடரை (3 'டி-20', 3 ஒருநாள் போட்டி) இந்தியா ஒத்திவைத்தது. 2015ல் மெல்போர்னில் நடந்த உலக கோப்பை (50 ஓவர்) காலிறுதிக்கு பின் இந்தியா-வங்கதேசம் இடையிலான போட்டியில் பதட்டம் அதிகரித்துள்ளது. அதில் ரோகித் சர்மா 90 ரன் எடுத்திருந்த போது, ரூபல் பந்தை துாக்கி அடித்தார். 'பீல்டர்' சரியாக பிடித்தார். ஆனால், பேட்டர் இடுப்புக்கு மேலே பந்து வீசியதாக கூறி, அம்பயர் 'நோ-பால்' என அறிவித்தார். பின் ரோகித் சதம் அடித்து இந்திய வெற்றிக்கு கைகொடுத்தார். இந்த 'நோ-பால்' பிரச்னை பூதாகரமானது. வங்கதேச அணி புகார் செய்தது. அந்நாட்டு ரசிகர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இம்முறையும் போட்டி 'டென்ஷனாக' இருக்கலாம்.

முஸ்தபிஜுர் பலம்

வங்கதேச கேப்டன் லிட்டன் தாஸ் முதுகு பிடிப்பால் அவதிப்படுவது பலவீனம். மற்றொரு பேட்டரான தவுஹித் 'ஸ்டிரைக் ரேட்' (124) 'டி-20' போட்டிக்கு ஏற்ப இல்லை. 'வேகத்திற்கு' முஸ்தபிஜுர், டஸ்கின், டன்ஜிம் உள்ளனர். 'சுழலுக்கு' ரிஷாத், மெஹதி ஹசன் உள்ளனர். கடந்த 'சூப்பர்-4' போட்டியில் இலங்கையை வீழ்த்தி அதிர்ச்சி கொடுத்தது வங்கம். இதற்கு மெஹதி (2 விக்.,), முஸ்தபிஜுர் (3) பந்துவீச்சு முக்கிய காரணம். இவர்கள் இந்தியாவுக்கும் தொல்லை கொடுக்கலாம்.

யார் ஆதிக்கம்

இரு அணிகளும் 17 'டி-20' போட்டியில் மோதின. இந்தியா 16ல் வென்று ஆதிக்கம் செலுத்துகிறது. ஒரு போட்டியில் வங்கதேசம் வென்றது.

* துபாய் வானிலை வெப்பமாக இருக்கும். ஆடுகளம் மந்தமாக இருப்பதால், பெரிய ஸ்கோர் எட்டுவது கடினம்.

திறமை உண்டு

வங்கதேச அணியின் தலைமை பயிற்சியாளர் பில் சிம்மன்ஸ் (வெ.இ.,) கூறுகையில்,''டி-20 அரங்கில் இந்தியா தான் 'நம்பர்-1' அணி. இதனால் போட்டியில் விறுவிறுப்பு அதிகம் இருக்கும். மூன்றரை மணி நேர ஆட்டம் முக்கியம். இந்தியாவுக்கு எதிராக சிறப்பாக செயல்படும் திறமை அனைத்து அணிகளுக்கும் உண்டு. துபாய் ஆடுகளம் பேட்டிங், பவுலிங்கிற்கு கைகொடுக்கும்,''என்றார்.






      Dinamalar
      Follow us