/
செய்திகள்
/
விளையாட்டு
/
பாட்மின்டன்
/
கொரிய பாட்மின்டன்: சாதிப்பாரா பிரனாய்
/
கொரிய பாட்மின்டன்: சாதிப்பாரா பிரனாய்
ADDED : செப் 22, 2025 10:43 PM

சுவோன்: கொரிய ஓபன் பாட்மின்டனில் இந்தியாவின் பிரனாய் சாதிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தென் கொரியாவில், 'சூப்பர் 500' சர்வதேச பாட்மின்டன் தொடர் இன்று துவங்குகிறது. ஆண்கள் ஒற்றையரில் இந்தியாவின் பிரனாய், ஆயுஷ் ஷெட்டி, கிரண் ஜார்ஜ் பங்கேற்கின்றனர். உலக சாம்பியன்ஷிப்பில் (2023) வெண்கலம் வென்ற பிரனாய், 2வது சுற்றில் சீனதைபேயின் சோ டியன் செனை சந்திக்க நேரிடும். சமீபத்தில் யு.எஸ்., ஓபனில் சாம்பியன் பட்டம் வென்ற ஆயுஷ், ஸ்ரீகாந்த் (இந்தியா), நரோகா (ஜப்பான்) உள்ளிட்ட முன்னணி வீரர்களுக்கு எதிராக வெற்றி கண்டார்.
பெண்கள் ஒற்றையரில் அனுபமா, கலப்பு இரட்டையரில் மோகித், லக்சிதா ஜோடி பங்கேற்கிறது. ஹாங்காங், சீன மாஸ்டர்ஸ் தொடர்களில் பைனல் வரை சென்று 2வது இடம் பிடித்த இந்தியாவின் சாத்விக்சாய்ராஜ், சிராக் ஷெட்டி ஜோடி, இத்தொடரில் இருந்து விலகியது.