/
செய்திகள்
/
விளையாட்டு
/
பாட்மின்டன்
/
அரையிறுதியில் இந்திய ஜோடி * சீன மாஸ்டர்ஸ் பாட்மின்டனில்
/
அரையிறுதியில் இந்திய ஜோடி * சீன மாஸ்டர்ஸ் பாட்மின்டனில்
அரையிறுதியில் இந்திய ஜோடி * சீன மாஸ்டர்ஸ் பாட்மின்டனில்
அரையிறுதியில் இந்திய ஜோடி * சீன மாஸ்டர்ஸ் பாட்மின்டனில்
ADDED : செப் 19, 2025 11:21 PM

ஷென்சென்: சீன மாஸ்டர்ஸ் பாட்மின்டன் அரையிறுதிக்கு இந்தியாவின் சாத்விக்சாய்ராஜ், சிராக் ஷெட்டி ஜோடி முன்னேறியது.
சீனாவில், மாஸ்டர்ஸ் 'சூப்பர் 750' பாட்மின்டன் தொடர் நடக்கிறது. ஆண்கள் இரட்டையர் பிரிவு காலிறுதியில் இந்தியாவின் சாத்விக்சாய்ராஜ், சிராக் ஷெட்டி ஜோடி, சீனாவின் ஜியாங் யு ரென், ஹாவோ நன் ஜி ஜோடியை சந்தித்தது.
முதல் செட்டை 21-14 என கைப்பற்றிய இந்திய ஜோடி, அடுத்த செட்டையும் எளிதாக (21-14) வசப்படுத்தியது. முடிவில் இந்திய ஜோடி 21-14, 21-14 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியது.
சிந்து ஏமாற்றம்
பெண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதியில் இந்தியாவின் சிந்து ('நம்பர்-14') உலகின் 'நம்பர்-1' வீராங்கனை, தென் கொரியாவின் சே யங் ஆனை எதிர்கொண்டார். முதல் செட்டை 14-21 என இழந்த சிந்து, அடுத்த செட்டையும் 13-21 என எளிதாக நழுவவிட்டார். முடிவில் சிந்து 14-21, 13-21 என்ற செட் கணக்கில் தோல்வியடைந்தார்.