sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/விளையாட்டு/பாட்மின்டன்/பைனலில் இந்திய ஜோடி * தாய்லாந்து பாட்மின்டனில்...

பைனலில் இந்திய ஜோடி * தாய்லாந்து பாட்மின்டனில்...

பைனலில் இந்திய ஜோடி * தாய்லாந்து பாட்மின்டனில்...


ADDED : மே 16, 2026 11:11 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 16, 2026 11:11 PM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பாங்காக்: தாய்லாந்து ஓபன் பாட்மின்டன் இரட்டையர் பிரிவு பைனலுக்கு இந்தியாவின் சாத்விக்சாய்ராஜ், சிராக் ஷெட்டி ஜோடி முன்னேறியது.

பாங்காக்கில், தாய்லாந்து ஓபன் 'சூப்பர் 500' பாட்மின்டன் தொடர் நடக்கிறது. ஆண்கள் இரட்டையர் பிரிவு அரையிறுதியில் இத்தொடரின் 'நம்பர்-1' அந்தஸ்து பெற்ற இந்தியாவின் சாத்விக்சாய்ராஜ், சிராக் ஷெட்டி ஜோடி, 'நம்பர்-3', மலேசியாவின் கோ பெய், நுர் இஜுதீன் ஜோடியை எதிர்கொண்டது.

முதல் செட்டை இந்திய ஜோடி 19-21 என இழந்தது. பின் சுதாரித்த இந்திய ஜோடி அடுத்த செட்டை 22-20 என போராடி கைப்பற்றியது. மூன்றாவது, கடைசி செட்டையும் 21-16 என வென்றது.

ஒரு மணி நேரம் 22 நிமிடம் நீடித்த போட்டி முடிவில் இந்திய ஜோடி 19-21, 22-20, 21-16 என்ற கணக்கில் வென்று பைனலுக்கு முன்னேறியது. இதில் இன்று இந்தோனேஷியாவின் லியோ ரோலி, டேனியல் மார்தின் ஜோடியை எதிர்கொள்கிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us