UPDATED : ஜூன் 09, 2026 09:39 PM
ADDED : ஜூன் 09, 2026 08:20 PM

புதுச்சேரி: உலக பெருங்கடல் தினத்தையொட்டி, கடற்கரையில் என்.சி.சி., மாணவர்கள் துாய்மை பணி மேற்கொண்டனர்.
உலக பெருங்கடல் தினத்தை முன்னிட்டு, கடல்வள பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில், புதுச்சேரி கடற்படை பிரிவு என்.சி.சி., சார்பில், சுண்ணாம்பாறு படகு இல்ல கடற்கரையில் நேற்று முன்தினம் துாய்மைப் பணி நடந்தது.
கடல்சார் சுற்றுச்சூழல் அமைப்பிற்கு தீங்கு விளைவிக்கக்கூடிய பிளாஸ்டிக் பாட்டில்கள், கவர்கள், உணவுப் பொட்டலங்கள் மற்றும் மக்காத இதர பிளாஸ்டிக் கழிவுகள் என, மொத்தம் 100 கிலோ பிளாஸ்டிக் கழிவுகளை மாணவர்கள் சேகரித்து அப்புறப்படுத்தினர். துாய்மைப் பணியில் 40 கடற்படை பிரிவு என்.சி.சி., கேடட்கள், 7 பயிற்சிப் பணியாளர்கள் மற்றும் 2 அதிகாரிகள் என பலர் கலந்துகொண்டனர்.
