sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

அரசு திட்டங்களுக்கான வருமான உச்சவரம்பு... அதிகரிக்கப்படுமா? இதர பிரிவினர்கள் எதிர்பார்ப்பு

/

அரசு திட்டங்களுக்கான வருமான உச்சவரம்பு... அதிகரிக்கப்படுமா? இதர பிரிவினர்கள் எதிர்பார்ப்பு

அரசு திட்டங்களுக்கான வருமான உச்சவரம்பு... அதிகரிக்கப்படுமா? இதர பிரிவினர்கள் எதிர்பார்ப்பு

அரசு திட்டங்களுக்கான வருமான உச்சவரம்பு... அதிகரிக்கப்படுமா? இதர பிரிவினர்கள் எதிர்பார்ப்பு


ADDED : செப் 30, 2025 05:57 AM

Google News

ADDED : செப் 30, 2025 05:57 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி : புதுச்சேரி அரசின் நலத்திட்டங்களுக்கான வருமான உச்ச வரம்பினை அனைத்து பிரிவினருக்கு காலத்துகேற்ப மாற்றியமைக்க வேண்டும் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.இது தொடர்பாக அரசு கொள்கை முடிவெடுத்து விரைவில் அறிவிக்க வேண்டும். புதுச்சேரியின் தனி நபர் வருமானம் கடந்தாண்டினை ஒப்பிடும்போது ரூ.2,87,354 இருந்து 3,02,680 ஆக உயர்ந்துள்ளது. கடந்த பட்ஜெட் தாக்கலின்போது, தனிநபர்களிடம் ரூ.15 ஆயிரம் வருவாய் அதிகரித்துள்ளதாக கவர்னர் கைலாஷ்நாதனும் மகிழ்ச்சியாக குறிப்பிட்டார்.

மாநிலத்தில், தனிநபர் வருமானம் 3 லட்சத்தை தாண்டிய நிலையில், பல திட்டங்களுக்கு விண்ணப்பித்ததற்கான வருமான உச்ச வரம்பினை அதிகரிக்க, எம்.எல்.ஏ.,க்கள் வலியுறுத்தினர்.

அதையடுத்து, ஆதிதிராவிடர், பழங்குடியினர் நலத் துறையில் நலத்திட்டங்கள் பெறுவதற்கான வருமான உச்ச வரம்பு ரூ.8 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.

இது அட்டவணை இன மக்களிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இருப்பினும் இதர பிரிவினர்களை பொருத்தவரை ஏமாற்றத்தை அளித்து வருகின்றது. இவர்களுக்கான ஆண்டு வருமான உச்ச வரம்பு ஆதிகாலத்தில் இருக்கின்றது. காலத்துகேற்ப மாற்றாமல் இன்னும் 75 ஆயிரம் ரூபாய் என்றே குறிப்பிடப்பட்டு வருவது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

விதவைகள், கணவரால் கைவிடப்பட்டவர்கள், திருநங்கைகள், முதிர்கன்னிகள், 55 வயதில் 59 வரையுள்ளவர்களுக்கு தலா 2 ஆயிரம் ரூபாய் பென்ஷன் தொகை வழங்கப்படுகின்றது. 60 வயது முதல் 79 வயது வரையுள்ளவர்களுக்கு 2,500 ரூபாய், 80 வயதிற்கு மேல் 3,500 ரூபாய் முதியோர் பென்ஷன் தொகை வழங்கப்படுகின்றது.

இதேபோல் மாநிலத்தில் விலைவாசி உயர்வுக்கு ஏற்ப குறைந்தபட்ச ஊதியம் 15,000 ரூபாய் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வீட்டு வேலை செய்தால் கூட 10 ஆயிரம் ரூபாய் சம்பளம் தரப்படுகின்றது.

அப்படி பார்க்கும்போது, வீட்டில் இரண்டு பேருடைய பென்ஷன் தொகை சேர்த்தாலே அரசு சொல்லும் ஆண்டு வருமான வரம்பு எல்லையான75 ஆயிரம் ரூபாயை சர்வ சாதாரணமாக தாண்டி விடும்.

அப்படி இருக்கும்போது காலத்துகேற்ப இன்னும் ஏன் வருமான உச்ச வரம்பிற்கான தொகை அதிகரிக்கவில்லை என தாசில்தார் அலுவலகங்களில் இதர பிரிவினரும் கேள்வி எழுப்பி வாக்குவாதத்தில் தினமும் ஈடுபட்டு வருகின்றனர். பொதுமக்களின் கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் வருவாய் துறையினரும் திண்டாடி வருகின்றனர்.

அட்டவணை பிரிவினரை போன்று அரசின் நலத்திட்டங்களுக்கான வருமான உச்ச வரம்பினை அனைத்து பிரிவினருக்கு காலத்துகேற்ப மாற்றியமைக்க வேண்டும்.

இது தொடர்பாக அரசு கொள்கை முடிவெடுத்து விரைவில் அறிவிக்க வேண்டும் என்பதே அவர்களின் எதிர்பார்ப்பாகவும் உள்ளது.






      Dinamalar
      Follow us