/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
100 சதவீத ஓட்டுப்பதிவை வலியுறுத்தி வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சி
/
100 சதவீத ஓட்டுப்பதிவை வலியுறுத்தி வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சி
100 சதவீத ஓட்டுப்பதிவை வலியுறுத்தி வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சி
100 சதவீத ஓட்டுப்பதிவை வலியுறுத்தி வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சி
ADDED : ஏப் 03, 2026 05:41 AM

புதுச்சேரி: நுாறு சதவீத ஓட்டுப்பதிவை வலியுறுத்தி, சேதராப்பட்டு தனியார் நிறுவனத்தில், வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
புதுச்சேரி சட்டசபை தேர்தல் வரும் 9ம் தேதி நடக்கிறது. இதனையொட்டி, பல்வேறு நிகழ்ச்சியின் மூலமாக வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக, சேதராப்பட்டு தொழிற்பேட்டையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் நடந்த வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சியில், மாவட்ட தேர்தல் அதிகாரி குலோத்துங்கன் கலந்து கொண்டு பேசுகையில், 'தொழிலாளர்கள் ஓட்டுப்பதிவு செய்வதற்காக அரசு சிறப்பு விடுமுறை அளித்துள்ளது. அதனை பயன்படுத்தி குடும்பத்துடன் தவறாமல் ஓட்டளிக்க வேண்டும்.
வாக்காளர்களின் ஒவ்வொரு ஓட்டும்,அவர்களது எதிர்காலத்தினை நிர்ணயிக்கிறது.
நாம் மட்டும் ஓட்டளித்தால் போதாது. மற்றவர்களையும் ஓட்டு போட ஊக்குவித்தல் வேண்டும். நுாறு சதவீத ஓட்டுப் பதிவினை அடைந்து, புதுச்சேரியை ஒரு முன்மாதிரி மாநிலமாக மாற்றிட அனைவரும் அவர்களது பங்கினை ஆற்றிட வேண்டும்' என்றார்.
தொடர்ந்து நுாறு சதவீத ஓட்டுப் பதிவினை வலியுறுத்தி வேண்டுகோள் கடிதங்களை, தொழிலாளர்கள்களிடம் வழங்கினார்.முன்னதாக, மாவட்ட தேர்தல் அதிகாரி அலுவலகத்தின் தேர்தல் கீதம் மற்றும் வாக்காளர் விழிப்புணர்வு கருத்துக்கள் அடங்கிய காணொளி திரையிடப்பட்டது.
நிகழ்ச்சியில், 600 தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.

