/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சாராயக்கடை வைக்க கிராம மக்கள் எதிர்ப்பு மணவெளியில் பரபரப்பு
/
சாராயக்கடை வைக்க கிராம மக்கள் எதிர்ப்பு மணவெளியில் பரபரப்பு
சாராயக்கடை வைக்க கிராம மக்கள் எதிர்ப்பு மணவெளியில் பரபரப்பு
சாராயக்கடை வைக்க கிராம மக்கள் எதிர்ப்பு மணவெளியில் பரபரப்பு
ADDED : செப் 13, 2025 07:17 AM

அரியாங்குப்பம் :மணவெளியில் சாராயக்கடை வைக்க எதிர்ப்பு தெரிவித்து, சிமென்ட் கட்டைகளை பிடுங்கி எறிந்ததால் பரபரப்பு நிலவியது.
அரியாங்குப்பம் அடுத்த மணவெளி, சுடலை வீதி, ஆற்றங்கரை ஓரத்தில், கலால் துறை அனுமதியுடன் சாராயக்கடை வைக்க நேற்று காலை 11:00 மணிக்கு ெஷட் அமைக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர்.
அதனை அறிந்த அப்பகுதி மக்கள் திரண்டு வந்து குடியிருப்பு பகுதியில் சாராயக்கடை வைக்க எதிர்ப்பு தெரிவித்து, கட்டுமான பணியை தடுத்து நிறுத்தினர். அங்கு வந்த முன்னாள் எம்.எல்.ஏ., அனந்தராமன், சாராயக்கடை கட்டுமான பணியில் ஈடுபட்ட உரிமையாளரிடம், இது குடியிருப்பு பகுதி; பள்ளி, கோவில்கள் உள்ளது. இப்பகுதி சுற்றுலாத் தளமாக வளர்ச்சி அடைந்து வருகிறது. இங்கு, சாராயக்கடை வைத்தால், பொதுமக்களுக்கு பல்வேறு பிரச்னைகள் ஏற்படும்' என்றார்.
இதற்கிடையே, அப்பகுதி மக்கள் சாராயக்கடைக்காக ெஷட் அமைக்க நடப்பட்டிருந்த சிமென்ட் கட்டைகளை பிடுங்கி அகற்றியதால், பரபரப்பு நிலவியது. சம்பவ இடத்திற்கு வந்த கலால்துறை தாசில்தார் ராஐேஷ்கண்ணா, போராட்டத்தில் ஈடுபட்ட மக்களிடம், விசாரித்து நடவடிக்கை எடுப்பதாக கூறினார். அதனையேற்ற கிராம மக்கள் மதியம் 12:00 மணிக்கு போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இச்சம்பவத்தினால், அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.