வெங்கடேஸ்வரா கல்வி குழுமம் சித்தாந்தா பவுண்டேஷன் ஒப்பந்தம்
வெங்கடேஸ்வரா கல்வி குழுமம் சித்தாந்தா பவுண்டேஷன் ஒப்பந்தம்
ADDED : ஜூன் 20, 2026 06:08 AM

வில்லியனுார்: வெங்கடேஸ்வரா கல்வி குழுமம், சித்தாந்தா நாலெஜ் பவுண்டேஷன் உடன் ஒப்பந்தம் செய்துள்ளது.
அரியூர் வெங்கடேஸ்வரா கல்வி குழுமம் மற்றும் சென்னை சித்தாந்தா நாலெஜ் பவுண்டேஷன் ஆகிய நிறுவனங்களுக்கு இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது.
இந்த ஒப்பந்தத்தின் மூலம் இந்திய அறிவு முறை, கல்வி மேம்பாடு, ஆராய்ச்சி ஒத்துழைப்பு, ஆசிரியர் திறன் மேம்பாடு, அறிவுப் பரிமாற்றம் மற்றும் மாணவர் மேம்பாட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
இந்நிகழ்வில் இரு நிறுவனங்களின் நிர்வாகத்தினரும், கல்வியாளர்களும் கலந்து கொண்டு, தரமான கல்வி மற்றும் ஆராய்ச்சி வளர்ச்சிக்கான தங்களது உறுதிப்பாட்டை தெரிவித்தனர். இந்திய அரசின் கல்வி அமைச்சகத்தினால் அங்கீகரிக்கப்பட்ட சித்தாந்தா நாலெஜ் பவுண்டேஷன், இந்திய அறிவு முறை மற்றும் பாரம்பரியத்தையும், உயர்கல்வியுடன் இணைக்கும் 100-க்கும் மேற்பட்ட பாடத்திட்டங்களை உருவாக்கி வருகிறது. இந்த ஒப்பந்தம் மாணவர்களின் கல்வி, ஆராய்ச்சி மற்றும் வேலைவாய்ப்பு திறன்களை மேம்படுத்துவதோடு, கல்வி - தொழில்துறை ஒத்துழைப்பை வலுப்படுத்தும்.
