உழவர்கரை தொகுதி காங்., வேட்பாளர் சிவசங்கர் மனு தாக்கல்
உழவர்கரை தொகுதி காங்., வேட்பாளர் சிவசங்கர் மனு தாக்கல்
ADDED : மார் 23, 2026 10:27 PM

புதுச்சேரி: உழவர்கரை தொகுதிக்கு காங்., சார்பில் சுயேட்சை எம்.எல்.ஏ., சிவசங்கர் மனு தாக்கல் செய்தார்.
புதுச்சேரி வணிகர்கள் கூட்டமைப்பின் சேர்மனும், சுயேட்சை எம்.எல்.ஏ.,வுமான சிவசங்கர் உழவர்கரை தொகுதிக்கு காங்., சார்பில் போட்டியிட தனது ஆதரவாளர்களுடன் சென்று, வில்லியனுார் வட்டார வளர்ச்சி அலுவலத்தில் நேற்று மனு தாக்கல் செய்தார்.
மனு தாக்கல் செய்த பின், அவர் கூறுகையில், கடந்த 2021-ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் உழவர்கரை தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிட்டு வெற்றிப்பெற்றேன்.
தனது தொகுதியில் உள்ள அனைத்து சாலைகளையும் மேம்படுத்தி, புதிய சாலைகளை அமைத்துள்ளேன். தெரு விளக்குகள், வீடுகளுக்கும் குடிநீர் குழாய்கள் அமைத்தல் என கடந்த 5 ஆண்டுகளில் 150 கோடி ரூபாய்க்கு மேல் பல்வேறு திட்டப்பணிகளை செய்துள்ளேன்.
மக்களின் பிரச்னைகளை கேட்க, எளிதாக தன்னை சந்திக்கவும், அவர்களது தனிப்பட்ட குறைகளை அதிகாரிகளிடம் அழைத்து சென்று தீர்த்து வைத்துள்ளேன். தொகுதி மக்களின் நலனுக்காவும், தொடர்ந்து, தொய்வின்றி பணி செய்தேன். இந்த சட்டசபை தேர்தலில், உழவர்கரை தொகுதியில், காங்., சார்பில் மனு தாக்கல் செய்துள்ளேன். வரும் 9ம் தேதி நடக்கும் தேர்தலில், எனக்கு ஓட்டு அளித்து வெற்றிப்பெற செய்ய வேண்டும் என தெரிவித்தார்.
