/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
போலீசாரின் திட்டமிட்ட பணியால் போக்குவரத்து நெரிசல் தவிர்ப்பு
/
போலீசாரின் திட்டமிட்ட பணியால் போக்குவரத்து நெரிசல் தவிர்ப்பு
போலீசாரின் திட்டமிட்ட பணியால் போக்குவரத்து நெரிசல் தவிர்ப்பு
போலீசாரின் திட்டமிட்ட பணியால் போக்குவரத்து நெரிசல் தவிர்ப்பு
ADDED : அக் 20, 2025 10:42 PM

புதுச்சேரி: தீபாவளியை முன்னிட்டு போலீசார் மேற்கொண்ட முன்னேற்பாடு பாதுகாப்பு காரணமாக, நகர மக்கள் போக்குவரத்து நெரிசலில் இருந்து தப்பினர்.
புதுச்சேரிக்கு சுற்றுலா பயணிகள் வருகையும், அதனால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், ரயில்வே மேம்பால பணிக்காக கடலுார் சாலை மூடப்பட்டுள்ளதால், கடந்த ஒரு மாதத்திற்கு மேலாகவே நகரம் போக்குவரத்து நெரிசலால் திணறி வந்தது.
இதனால், தீபாவளி பண்டிகையையொட்டி வரும் கூட்ட நெரிசலை எப்படி சமாளிக்க போகிறோமோ என நகர மக்கள் விழிபிதுங்கி வந்தனர்.
இந்நிலையில், தீபாவளி பண்டிகையின் போது ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க, அமைச்சர் நமச்சிவாயம், போலீஸ் அதிகாரிகளை அழைத்து ஆலோசனை நடத்தினர்.
அதனைத் தொடர்ந்து டி.ஜி.பி., ஷாலினிசிங் உத்தரவின்பேரில், சட்டம் ஒழுங்கு, போக்குவரத்து, ஆயுதப்படை, கமண்டோ என 500க்கும் மேற்பட்ட போலீசார் போக்குவரத்து சீரமைப்பு மற்றும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
போக்குவரத்து சீரமைப்பு பணியில் போலீசாருக்கு உதவியாக என்.எஸ்.எஸ்., என்.சி.சி., மாணவர்களும் களமிறக்கப்பட்டு, அணிவகுத்து வந்த வாகனங்களை ஒழுங்குபடுத்தி, போக்குவரத்தை சீரமைத்தனர். மேலும், கூட்ட நெரிசலில் ஏற்படும் குற்றங்களை தடுக்க ஒற்றாடல் பிரிவு போலீசார் நகர பகுதிகளில் தொடர்ந்து கண்காணித்து வந்தனர்.
இப்பணிகளை டி.ஐ.ஜி.,சத்தியசுந்தரம், சீனியர் எஸ்.பி.,க்கள் கலைவாணன், பிரவின்குமார் திரிபாதி, நித்யாராதாகிருஷ்ணன் மற்றும் எஸ்.பி.,க்கள் அவ்வப்போது நகரப் பகுதிகளில் ரோந்து சென்று போலீசாரின் பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து சீரமைப்பு பணிகளை ஆய்வு செய்து, நிலமைக்கு ஏற்ப ஆலோசனைகளை வழங்கினர்.
மேலும் தீபாவளியை மக்கள் அச்சமின்றி கொண்டாடும் பொருட்டு நேற்று முன்தினம் இரவு டி.ஐ.ஜி., தலைமையில் ராஜிவ் சதுக்கத்தில் துவங்கி நகரின் முக்கிய வீதிகள் வழியே கொடி அணிவகுப்பு நடத்தினர்.
போலீசாரின் இரவு ரோந்து பணியை தீவிரப்படுத்தி டி.ஐ.ஜி., ரோந்து பணியில் ஈடுபட்ட போலீசாருக்கு இனிப்புகள் வழங்கி உற்சாகப்படுத்தினார். போலீசாரின் திட்டமிட்ட முன்னேற்பாடு காரணமாக புதுச்சேரி நகர மக்கள் தீபாவளி பண்டிகையை மகிழ்ச்சியாக கொண்டாடினர்.