/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
வணிகர்கள் உரிமை மாநாடு புதுச்சேரியில் இன்று நடக்கிறது
/
வணிகர்கள் உரிமை மாநாடு புதுச்சேரியில் இன்று நடக்கிறது
வணிகர்கள் உரிமை மாநாடு புதுச்சேரியில் இன்று நடக்கிறது
வணிகர்கள் உரிமை மாநாடு புதுச்சேரியில் இன்று நடக்கிறது
ADDED : செப் 24, 2025 06:01 AM
புதுச்சேரி : புதுச்சேரி வணிகர்கள் கூட்டமைப்பு சார்பில் வணிகர்கள் உரிமை மாநாடு சுகன்யா கன்வென்ஷன் சென்டரில் இன்று மாலை நடக்கிறது.
மாநாட்டுக்கு புதுவை வணிகர் கூட்டமைப்பு தலைவர் சிவசங்கர் எம்.எல்.ஏ., தலைமை தாங்குகிறார். சிறப்பு விருந்தினராக சமூக சேவகர் ஜோஸ் சார்லஸ் மார்டின் கலந்து கொள்கிறார். அங்காளன் எம்.எல்.ஏ., வில்லியம் ரீகன் ஜான்குமார் ஆகியோர் வாழ்த்துரை வழங்குகின்றனர்.
புதுவை வணிகர்கள் கூட்டமைப்பு தலைவர் பாபு, முதன்மை துணைத் தலைவர் சீனுவாசன், பொதுச்செயலாளர் முருகபாண்டியன், பொருளாளர் தங்கமணி ஆகியோர் மாநாடு குறித்து நோக்க உரையாற்றுகின்றனர்.
மாநாட்டில் புதுவை வணிகர் கூட்டமைப்பின் டைரக்டரியை ஜோஸ் சார்லஸ் மார்டின் வெளியிட, அதனை டைரக்டரி சேர்மன் வைத்தியநாதன் பெற்றுக்கொள்கிறார். மாநாட்டில் புதுச்சேரி, காரைக்கால், ஏனாம் வணிகர் கூட்டமைப்பின் நிர்வாகிகள் மற்றும் அனைத்து வகையான வியாபாரிகள் பங்கேற்கின்றனர். முடிவில் அனைவருக்கும் அறுசுவை உணவு வழங்கப்படுகிறது.
புதுச்சேரியில் வணிகர் நல வாரியம் அமைத்ததை முழுமையாக செயல்படுத்த வேண்டும். அண்டை மாநிலங்களை போல் புதுச்சேரியிலும் ஜி.எஸ்.டி., உச்சவரம்பை ரூ.20 லட்சத்தில் இருந்து ரூ.40 லட்சமாக உயர்த்த வேண்டும்.
பன்னாட்டு நிறுவன பிடியில் இருக்கும் வியாபாரத்தை மீட்டு, உள்ளூர் வணிகத்தை காக்க அனைத்து முயற்சிகளும் எடுப்பது, ஜி.எஸ்.டி., வரி, நகராட்சியின் குப்பை வரியை அகற்ற வேண்டும். வணிகர் உரிமத்தை எளிமை படுத்த வேண்டும். வணிகர் உரிமத்துக்கான வரியை குறைக்க வேண்டும். புதுச்சேரியில் ரவுடிகளால் வியாபாரிகளுக்கு ஏற்படும் அச்சுறுத்தலை தடுக்க வேண்டும்.
ஜி.எஸ்.டி., வரியை குறைத்து சிரமைத்ததற்கு நன்றி தெரிவித்தும் உள்ளிட்ட கோரிக்கைகள் மாநாட்டில் வலியுறுத்தப்படவுள்ளது.