ADDED : மே 23, 2026 03:28 AM

அ நிறம் | அளவு
புதுச்சேரி: புதுச்சேரியை சேர்ந்த பெண் ஒரு வர், சமூக வலைதளமான 'இன்ஸ்டாகிராம்' மூலம், மர்ம நபர் பாலியல் தொல்லை கொடுத்து, மன உளைச்சலுக்கு ஆளாக்கி வருவதாக, மே, 6ம் தேதி சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார்.
சீனி யர் எ ஸ். பி., ராகவ் உத்தரவில், போலீசார் விசாரணை நடத் தினர். அதில், போலி இன்ஸ்டாகிராம் கணக்கின் மூலம், பெண்ணுக்கு ஆபாச படங்கள் மற்றும் வீடியோ அழைப்புகள் மூலம் பாலியல் தொந்தரவு கொடுத்தவர், திண்டுக்கல்லை சேர்ந்த கல்லுாரி மாண வர் அருண், 21, என, தெரிந்தது.
தனிப்படை போலீசார், அருணை கைது செய்தனர்.
