மாநில சீனியர் டென்னிக்காய்ட் சாம்பியன்ஷிப் போட்டி துவக்கம்
மாநில சீனியர் டென்னிக்காய்ட் சாம்பியன்ஷிப் போட்டி துவக்கம்
UPDATED : மே 30, 2026 06:26 PM
ADDED : மே 30, 2026 06:20 PM
பாகூர்: சேலியமேட்டில் 34வது மாநில அளவிலான டென்னிக்காய்ட் சாம்பியன்ஷிப் போட்டியின் துவக்க விழா மே 30 நடந்தது.
புதுச்சேரி அமெச்சூர் டென்னிக்காய்ட் அசோசியேஷன் மற்றும் சேலியமேடு காமராஜர் இளையோர் வளர்ச்சி மையம் சார்பில், 34வது மாநில அளவிலான முதுநிலை ஆடவர் மற்றும் பெண்கள் பங்பெறும் டென்னிக்காய்ட் சாம்பியன்ஷிப் போட்டிக்கு ஏற்பாடு செய்துள்ளது. அதன்படி, இப்போட்டியின் துவக்க விழா சேலியமேடு செங்கழுநீர் மாரியம்மன் கோவில் திடலில் நேற்று நடந்தது. ஓய்வு பெற்ற விரிவுரையாளரர் சபாபதி தேசிய கொடியேற்றினார்.
புதுச்சேரி அமெச்சூர் டென்னிக்காய்ட் சங்க துணை தலைவர் பச்சையப்பன், டென்னிக்காய்ட் சங்க கொடியேற்றினார். காமராஜர் இளையோர் வளர்ச்சி மைய பொருளாளர் ராமதாஸ், மன்றத்தின் கொடியை ஏற்றி வைத்தார்.
இளையோர் வளர்ச்சி மைய தலைவர் தனக்கொடி தலைமை தாங்கினார். செயற்குழு உறுப்பினர் முத்துக்குமரன் வரவேற்றார். சமூக ஆர்வலர் சிவப்பிரகாசம், புதுச்சேரி அமெச்சூர் கோ-கோ கழக பொதுச் செயலாளர் முத்துக்கிருஷ்ணன், பொதுப்பணித் துறை இளநிலைப் பொறியாளர் சின்னராசு ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு டென்னிக்காய்ட் சாம்பியன்ஷிப் போட்டியை துவக்கி வைத்தனர்.
இப்போட்டியில், பாகூர், சேலியமேடு, கன்னியக்கோவில், வில்லியனுார், அரியூர், கொம்பாக்கம் உள்ளிட்ட புதுச்சேரியின் பல்வேறு பகுதியை சேர்ந்த 10 அணிகளை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட வீரர் மற்றும் வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். வளர்ச்சி மைய செயலாளர் அருளரசன் நன்றி கூறினார். ஏற்பாடுகளை மன்ற நிர்வாகிகள் தர்மலிங்கம், முருகசாமி, கார்த்திகேயன் மற்றும் விளையாட்டு வீரர்கள் செய்துள்ளனர்.
