/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
குண்டர் சட்டத்தில் ரவுடி கைது
/
குண்டர் சட்டத்தில் ரவுடி கைது
ADDED : மார் 19, 2026 04:29 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: கரிக்கலாம்பாக்கம் குளத்துமேடு தெருவை சேர்ந்தவர் விநாயகம் (எ) விநாயகமூர்த்தி, 36; ரவுடி. இவர் மீது கொலை, கொலை முயற்சி, அடிதடி உள்ளிட்ட 13க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. தற்போது கொலை முயற்சி வழக்கு ஒன்றில் விநாயகம் காலாப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் அவர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க மாவட்ட மேற்குப்பகுதி எஸ்.பி., சுப்ரமணியன், கலெக்டருக்கு பரிந்துரை செய்தார்.
இதையேற்று விநாயகம் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க கலெக்டர் குலோத்துங்கன் உத்தரவிட்டார். அதற்கான உத்தரவு ஆணையை போலீசார், காலாப்பட்டு சிறைத்துறை தலைமை எஸ்.பி.,க்கு அனுப்பி வைத்தனர்.

