தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ சாலையோர ஆக்கிரமிப்புகள் 16ம் நாளாக இன்று அகற்றம்

 சாலையோர ஆக்கிரமிப்புகள் 16ம் நாளாக இன்று அகற்றம்

 சாலையோர ஆக்கிரமிப்புகள் 16ம் நாளாக இன்று அகற்றம்


ADDED : ஜூன் 22, 2026 03:53 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 22, 2026 03:53 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி தொடர்ந்து இன்று 16வது நாளாக நடக்கிறது.

கலெக்டர் குலோத்துங்கன் உத்தரவின்படி, புதுச்சேரி நகரின் முக்கிய சாலைகளில் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள சாலையோர ஆக்கிரமிப்புகள், அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள பேனர்கள், விளம்பர பலகைகள் மற்றும் சாலைகளின் அழகியலை பாதிக்கும் பிற செயல்களை அகற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.

பொதுப்பணித் துறை, வருவாய்த் துறை, போலீஸ் துறை மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் அலுவலர்கள் இணைந்து சாலையோர ஆக்கிரமிப்புகள், அனுமதியின்றி பொது இடங்களில் வைக்கப்பட்டுள்ள பேனர்கள் மற்றும் கட்-அவுட்டுகளை அகற்றும் பணி கடந்த 1ம் தேதி துவங்கியது. இப்பணி இன்று (22ம் தேதி) நிறைவடைகிறது.

இந்நிலையில், 16வது நாளான இன்று (22ம் தேதி) ரங்கப்பிள்ளை தெரு - மிஷன் வீதி சந்திப்பு முதல் அண்ணாசாலை வரை, போக்குவரத்து போலீசார், பொதுப்பணித்துறை, புதுச்சேரி நகராட்சி மற்றும் வருவாய் துறை ஊழியர்கள் மூலம் சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நடக்கிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us