/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
முதியவரை மிரட்டிய மாஜி அமைச்சர் மீது வழக்குப் பதிய வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்
/
முதியவரை மிரட்டிய மாஜி அமைச்சர் மீது வழக்குப் பதிய வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்
முதியவரை மிரட்டிய மாஜி அமைச்சர் மீது வழக்குப் பதிய வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்
முதியவரை மிரட்டிய மாஜி அமைச்சர் மீது வழக்குப் பதிய வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்
ADDED : செப் 23, 2025 08:11 AM

புதுச்சேரி : பிரெஞ்சு குடியுரிமை பெற்ற முதியவரை மிரட்டிய, முன்னாள் அமைச்சர் மீது வழக்கு பதிவு செய்ய வலியுறுத்தி பல்வேறு அமைப்புகள் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
புதுச்சேரி, பெருமாள் கோவில் வீதியை சேர்ந்தவர் மூர்த்தி பால்ராஜ்,75; பிரெஞ்சு குடியுரிமை பெற்றவர்.
இவருக்கு, அம்பலத்தடையார் மடம் வீதியில் ரூ.5 கோடி மதிப்புள்ள 2,200 சதுர அடி வணிக வளாகம் உள்ளது. இந்த வணிக வளாகத்தின் கீழ்தளத்தில், தி.மு.க.,வை சேர்ந்த முன்னாள் அமைச்சர் சிவக்குமார் குத்தகை அடிப்படையில் நகைக்கடை நடத்தி வருகிறார்.
குத்தகை ஒப்பந்தம் இரண்டரை ஆண்டடிற்கு முன் முடிந்த நிலையில் சிவக்குமார் கடையை காலி செய்யவில்லை. இந்நிலையில் மூர்த்தி பால்ராஜ், தனது மனைவி இறந்துவிட்டதால், சொத்துக்களை விற்றுவிட்டு பிரான்ஸ் செல்ல முடிவு செய்து, சிவக்குமாரிடம் கடையை காலி செய்ய கூறினார். அதற்கு அவர் மறுத்து, மிரட்டியுள்ளார்.
இதுகுறித்து மூர்த்தி பால்ராஜ், கடந்த டிசம்பர் மாதம் பெரியக்கடை போலீசில் புகார் அளித்தார். ஆனால், வழக்கு பதிவு செய்யவில்லை. இதுகுறித்து மூர்த்தி பால்ராஜ்.
கடந்த ஆகஸ்ட் 20ம் தேதி, தனது சொத்தை மீட்டு தரக்கோரி கண்ணீர் மல்க அரசுக்கு வேண்டுகோள் விடுத்தார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியது.
அதனைத் தொடர்ந்து மூர்த்தி பால்ராஜிற்கு ஆதரவாக பல்வேறு அமைப்பினர் கடந்த 12ம் தேதி சீனியர் எஸ்.பி.,யை சந்தித்து, மாஜி அமைச்சர் மீது மூர்த்தி பால்ராஜ் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்ய வேண்டி மனு அளித்தனர்.
அந்த மனு கொடுத்து 10 நாட்களாகியும், நடவடிக்கை எடுக்காததை கண்டித்து பல்வேறு சமூக அமைப்பினர் நேற்று காலை காமாராஜர் சிலை அருகில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.எஸ்.யு.சி.ஐ., கட்சியின் மாநில நிர்வாகக்குழு உறுப்பினர் முத்து தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில், செயலாளர் லெனின்துரை, சிவக்குமார், இந்திய கம்யூ., எம்.எல்., அர்ச்சுணன், ஆதிதிராவிடர் அரசு ஊழியர் சங்க மேகராஜ், நடைபாதை வியாபாரிகள் சங்க சீனுவாசன் உள்ளிட்டோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். அப்போது, மூர்த்தி பால்ராஜ் அளித்த மிரட்டல் புகார் மீது வழக்கு பதிவு செய்யாவிட்டால் அடுத்தகட்டமாக சீனியர் எஸ்.பி., அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்தனர்.