/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
அரசு காலி பணிடங்களுக்கான உத்தேச அட்டவணை... வெளியீடு: முழுவீச்சில் களம் இறங்கிய பணியாளர் தேர்வு முகமை
/
அரசு காலி பணிடங்களுக்கான உத்தேச அட்டவணை... வெளியீடு: முழுவீச்சில் களம் இறங்கிய பணியாளர் தேர்வு முகமை
அரசு காலி பணிடங்களுக்கான உத்தேச அட்டவணை... வெளியீடு: முழுவீச்சில் களம் இறங்கிய பணியாளர் தேர்வு முகமை
அரசு காலி பணிடங்களுக்கான உத்தேச அட்டவணை... வெளியீடு: முழுவீச்சில் களம் இறங்கிய பணியாளர் தேர்வு முகமை
ADDED : செப் 11, 2025 03:08 AM

புதுச்சேரி: மாநில பணியாளர் தேர்வு முகமை உடனடியாக செயல்பாட்டிற்கு வந்துள்ள சூழ்நிலையில்அரசு காலி பணியிடங்களை நிரப்புவதற்கான உத்தேச அட்டவணை வெளியிட்டுள்ளது. புதுச்சேரியில் அரசு துறை காலியிடங்களை நிரப்ப முதல் முறையாக புதுச்சேரி பணியாளர் தேர்வு முகமை ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இதன் மூலம் இனி, குருப்-சி, குரூப்-பி அரசிதழ் பதிவு பெறாத பதவிகளை புதுச்சேரி அரசே உடனுக்குடன் முடிவு செய்து நிரப்ப வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்த மாநில பணியாளர் தேர்வு முகமை உடனடியாக செயல்பாட்டிற்கு வந்துள்ள சூழ்நிலையில், அரசு காலி பணியிடங்களை நிரப்புவதற்கான உத்தேச அட்டவணையை பணியாளர் தேர்வு முகமை வெளியிட்டுள்ளது. அத்துடன், துறை ரீதியாக காலியாக உள்ள அரசு பணியிடங்கள் விபரங்களையும் கேட்டுள்ளது.
போட்டி தேர்வு இனி புதுச்சேரி அரசு நடத்தும் அரசு பணியிடங்களுக்கான போட்டி தேர்வுகள் அனைத்தும் 100 மதிப்பெண்ணிற்கு 2 மணி நேரம் என்ற அடிப்படையில் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இப்பதவிக்கான போட்டி தேர்வு இடைநிலை, மேல்நிலை, பட்டதாரி என, மூன்று நிலைகளில் நடத்தப்பட உள்ளது.
உத்தேச அட்டவணை குரூப்-பி அரசிதழ் பதிவு பெறாத பணியிடங்களுக்கு ஒருங்கிணைந்த பட்டதாரிகளுக்கான போட்டி தேர்வு முதல் தாள், இரண்டாம் தாள் கொண்டதாக 100 மதிப்பெண்ணிற்கு கொள்குறி வகையில் நடத்தப்படும். இந்த போட்டி தேர்வு குறித்த அறிவிப்பு அடுத்தாண்டு பிப்., 8ம் தேதி வெளியாகும். இந்த போட்டி தேர்வு ஏப்., 12ம் தேதி நடத்தப்படும்.
குரூப்-சி ஒருங்கிணைந்த மேல்நிலை அளவிலான போட்டி தேர்வு, முதல் தாள், இரண்டாம் தாள் என இருதாள் கொண்டதாக நடத்தப்படும். இந்த போட்டி தேர்வு பிளஸ் 2, டிப்ளமோ படித்த மாணவர்கள் எழுதலாம். இதற்கான போட்டி தேர்வு அறிவிப்பு மார்ச் 8ம் தேதி வெளியிடப்படும். போட்டி தேர்வு மே மாதம் 10ம் தேதி நடத்தப்படும்.
குரூப்-சி பணியிடங்களுக்கான ஒருங்கிணைந்த இடைநிலை போட்டி தேர்வு குறித்த அறிவிப்பு அடுத்தாண்டு ஏப்., 5ல் வெளியாகிறது. இந்த போட்டி தேர்வு அடுத்தாண்டு ஜூன் 7ம் தேதி 100 மதிப்பெண்ணிற்கு 10 வகுப்பு தரத்தில் கொள்குறி வகையில் நடத்தப்படும்.
எல்.டி.சி., யு.டி.சி., அசிஸ்டண்ட் பதவிகள் அமைச்சக ஊழியர்கள் பதவிகளாக உள்ளன. இந்த பணியிடங்களை தவிர்த்துள்ள நான்-மினிஸ்ட்ரியல் டெக்னிக்கல் பத விக்கான போட்டி தேர்வு குறித்த அறிவிப்பு ஏப்ரல் 19ம் தேதி வெளியாகும். இப்பணியிடங்களுக்கு ஜூன் 21ம் தேதி போட்டி தேர்வு நடத்தப்படும் என, மாநில பணியாளர் தேர்வு முகமை அறிவித்துள்ளது.
தகுதி மதிப்பெண் இந்த போட்டி தேர்வில் பொது பிரிவினருக்கு குறைந்தபட்ச தகுதி மதிப்பெண் 30 ஆகவும், எஸ்.சி., எஸ்.டி., பிரிவினருக்கு 20 ஆகவும், ஓ.பி.சி., எம்.பி., மீனவர், முஸ்லீம், இ.டபுள்யூ.எஸ்., பிரிவினருக்கு 25 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அரசு துறைகளுக்கு கெடு சட்டசபை தேர்தல் நெருங்குவதால் அரசு பணியிடங்கள் குறித்த அறிவிப்பு அடுத்தடுத்து வெ ளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், பல பணிடங்களுக்கு நியமன விதிகள் காலத்துகேற்ப இன்னும் திருத்தப்படவில்லை. எனவே ஒவ்வொரு துறையிலும் உள்ள அரசு பணியிடங்களை, இம்மாதம் 30ம் தேதிக்குள் பணியாளர் தேர்வு முகமைக்கு சமர்ப்பிக்க வேண்டும். டிசம்பர் 31ம் தேதிக்குள் அரசு பணியிடங்களுக்கான நியமன விதியை திருத்தும் பணியை முடிக்க வேண்டும் எனவும் அரசு உத்தரவிட்டு, பணிகளை வேகப்படுத்தியுள்ளது.