தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/பிரைணி ப்ளும்ஸ் பள்ளியில் யோகாசன நிகழ்ச்சி

பிரைணி ப்ளும்ஸ் பள்ளியில் யோகாசன நிகழ்ச்சி

பிரைணி ப்ளும்ஸ் பள்ளியில் யோகாசன நிகழ்ச்சி


UPDATED : ஜூன் 21, 2026 08:33 PM

ADDED : ஜூன் 21, 2026 08:31 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 21, 2026 08:33 PM ADDED : ஜூன் 21, 2026 08:31 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: திருக்கனுார் பிரைனி ப்ளூம்ஸ் பள்ளியில் 12வது சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு, யோகா நிகழ்ச்சி நடந்தது.

புதுச்சேரி அரசு விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை, ஆயுஷ் துறை மற்றும் மேரா யுவா பாரத் ஒருங்கிணைப்பில் நடந்த நிகழ்ச்சியில், 100க்கும் மேற்பட்ட மாணவர்கள், பெற்றோர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டு யோகா பயிற்சியில் ஈடுபட்டனர்.

சிறப்பு விருந்தினர்களாக மண்ணாடிப்பட்டு சுகாதார மையம் ஆயுர்வேத மருத்துவர் ஜாய் இம்மானுவேல், மேரா யுவா பாரத் மாவட்ட இளைஞர் அலுவலர் சுக்கா சலீம் ராஜூ, மை பாரத் இயக்குனர் டிரவீன் சார்லஸ்டன், விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை திட்ட அலுவலர் சுப்ரமணியன், யோகா பயிற்சியாளர் செல்வரசி ஆகியோர் கலந்து கொண்டு யோகாவின் முக்கியத்துவம், உடல் மற்றும் மனநல மேம்பாட்டில் அதன் பங்கு, ஆரோக்கியமான வாழ்க்கை முறையை உருவாக்குவதில் யோகாவின் அவசியம் குறித்து பேசினார்.

நிகழ்ச்சியில் பிரைனி ப்ளூம்ஸ் குழும பள்ளிகளின் தலைவர் அருண்குமார், பள்ளி முதல்வர் ஜீன் பீட்டர், குழுமப் பள்ளிகளின் தலைமை செயல் அலுவலர் திவ்யா உட்பட பலர் பங்கேற்றனர்.

ஏற்பாடுகளை புதுச்சேரி விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை, ஆயுஷ் துறை, மேரா யுவா பாரத் மற்றும் பிரைனி ப்ளூம்ஸ் பள்ளி நிர்வாகம் செய்திருந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us