பண்டிட் தீனதயாள் உபாத்தியா பயிற்சியாளர்களுக்கான பயிற்சி
பண்டிட் தீனதயாள் உபாத்தியா பயிற்சியாளர்களுக்கான பயிற்சி
ADDED : ஜூன் 07, 2026 03:41 AM

புதுச்சேரி: புதுச்சேரி பா.ஜ., சார்பில், பண்டிட் தீனதயாள் உபாத்தியா பயிற்சியாளர்களுக்கான பயிற்சி முகாம் பா.ஜ., தலைமை அலுவலகத்தில் நடந்தது.
புதுச்சேரி மாநில பா.ஜ., சார்பில், மாவட்ட, மண்டல மற்றும் மாநில அளவிலான பயிற்சி முகாம்கள் விரைவில் நடைபெற உள்ளன. இந்த பயிற்சி முகாம்களில் பயிற்சி வழங்கும் பொறுப்பாளர்களுக்கு பண்டிட் தீனதயாள் உபாத்தியாய பயிற்சியாளர்களுக்கான பயிற்சி முகாம் பா.ஜ., மாநில தலைமை அலுவலகத்தில் நடந்தது.
நிகழ்ச்சிக்கு, பா.ஜ., மாநிலத் தலைவர் ராமலிங்கம் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளர்களாக மாநில பொறுப்பாளர் நிர்மல் குமார் சுரானா, அமைச்சர் நமச்சிவாயம், தசரத் ஆகியோர் கலந்துகொண்டு, பயிற்சி முகாம்களை சிறப்பாக நடத்துவது தொடர்பாக பல்வேறு ஆலோசனைகள் மற்றும் வழிகாட்டுதல்களை வழங்கினர்.
நிகழ்ச்சியில், முன்னாள் சபாநாயகர் செல்வம், மாநில பொது செயலாளர்கள் மோகன் குமார், லட்சுமி நாராயணன், எம்.எல்.ஏ.,க்கள்., மீனாட்சி சுந்தரம் விக்னேஸ்வரன், மாநில துணை தலைவர்கள், மாநில செயலாளர்கள், மாநில பிரிவு பொறுப்பாளர்கள், மாவட்ட தலைவர்கள் உட்பட பலர் பங்கேற்றனர். ஏற்பாடுகளை மாநில பயிற்சி பிரிவுத் தலைவர் சக்திவேல், வெற்றிவேல் ஆகியோர் செய்திருந்தனர்.
