ADDED : ஜூன் 14, 2026 09:57 AM
அ நிறம் | அளவு
புதுச்சேரி: வில்லியனுார், பாண்டியன் நகரைச் சேர்ந்தவர் ராம்ரூப். இவரது வீட்டு எதிரில் ரயில்வே கிராசிங் உள்ளது. இங்கு நேற்று மதியம் 12:30 மணியளவில் 55 வயது மதிக் கத்தக்க நபர் ஒருவர் ரயில் மோதி இறந்து கிடந்தார்.
தகவலறிந்த வில்லியனுார் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரித்தனர்.
விசாரணையில் அவர் நேற்று முன்தினம் இரவு 7:50 மணிக்கு சென்ற புதுச்சேரி - விழுப்புரம் பாசஞ்சர் ரயில் மோதி இறந்தது தெரியவந்தது. இதையடுத்து இறந்தவர் யார், எந்த ஊரை சேர்ந்தவர் என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
