தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ என்.ஆர்.காங்., - பா.ஜ., - அ.தி.மு.க., கூட்டணி உறுதி : சந்தோஷ் தகவல்

 என்.ஆர்.காங்., - பா.ஜ., - அ.தி.மு.க., கூட்டணி உறுதி : சந்தோஷ் தகவல்

 என்.ஆர்.காங்., - பா.ஜ., - அ.தி.மு.க., கூட்டணி உறுதி : சந்தோஷ் தகவல்


ADDED : நவ 30, 2025 05:22 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 30, 2025 05:22 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பு துச்சேரி பாஜ., தலைமை அலுவலகத்தில் நேற்று முன்தினம் மையக் குழு ஆலோசனைக் கூட்டம், அதைத்தொடர்ந்து ஓட்டுச்சாவடி முகவர்கள் கூட்டம் நடந்தது.

இதில் தேசிய அமைப்பு செயலாளர் சந்தோஷ், மாநில பொறுப்பாளர் நிர்மல் குமார் சுரானா, கட்சித் தலைவர் ராமலிங்கம், அமைச்சர் நமச்சிவாயம், செல்வ கணபதி எம்.பி.,எம்.எல்.ஏ.,க்கள் சாய் சரவணன், கல்யாணசுந்தரம், ரிச்சர்ட், தீப்பாய்தான், ராஜசேகர், செல்வம் ஆகியோர் கலந்து கொண்டனர். அமைச்சர் ஜான் குமார் பங்கேற்கவில்லை.

கூட்டத்தில் சந்தோஷ் பேசுகையில், 'புதுச்சேரியில் என்.ஆர்.காங்., - பாஜ., - அ.தி.மு.க., கூட்டணி உறுதியாகிவிட்டது. அதைப் பற்றி கவலைப்படாமல் தேர்தல் வேலையில் மட்டும் நீங்கள் கவனம் செலுத்த வேண்டும். நமது கூட்டணி கட்சியினருடன் இணைந்திருங்கள். ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் அணிக்கும், பா.ஜ.,விற்கும் எந்த தொடர்பும் இல்லை. அவர்களைப் பற்றி கட்சியினர் கவலைப்பட தேவையில்லை.

அவருடன் யாராவது இணை ய நினைத்தால் இப்பொழுதே சென்று விடுங்கள், யாரை நம்பியும் கட்சி இல்லை. சார்லஸ் மார்ட்டினுடன் நெருக்கமாக இருப்பவர்கள் மீது, கட்சி விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என, காட்டமாக கூறி னார்.

மக்களிடம் கருத்து கேட்பு

கடந்த வியாழக்கிழமை இரவு புதுச்சேரி வந்த பாஜ., தேசிய அமைப்பு செயலாளர் சந்தோஷ், மறுநாள் காலை கடற்கரையில் வாக்கிங் சென்றார். அப்பொழுது எதிரில் 'வாக்கிங்' சென்ற பலர், அவருக்கு வணக்கம் கூறினர். பொதுமக்களிடம் பேசிய தேசிய அமைப்பு செயலாளர், உள்ளூர் அரசியல் நிலவரங்களை கேட்டறிந்தார்.



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us