/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பாலா திரிபுரசுந்தரி அம்மன் கோவில் நவராத்திரி விழா
/
பாலா திரிபுரசுந்தரி அம்மன் கோவில் நவராத்திரி விழா
ADDED : செப் 29, 2025 02:59 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: இரும்பை ஸ்ரீ பாலா திரிபுரசுந்தரி அம்மன் கோவிலில் நவராத்திரி விழாவையொட்டி பரதநாட்டிய நிகழ்ச்சி நடந்தது.
புதுச்சேரி- திண்டிவனம் சாலை, இரும்பை குபேர் நகரில் அமைந்துள்ள ஸ்ரீ பாலா திரிபுரசுந்தரி அம்மன் கோவிலில் நவராத்திரி விழா துவங்கி நடந்து வருகிறது.
இதையொட்டி அம்பாளுக்கு தினசரி சிறப்பு அபிஷேகம், மாலை 6:00 மணிக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் தீபாராதனை நடக்கிறது. நேற்று மாலை நவராத்திரி விழாவில் கொலுவுக்கு தீபாரதனை நடந்தது.
அதனைத் தொடர்ந்து மாணவியர்களின் பரதநாட்டிய நிகழ்ச்சி நடந்தது.
ஏற்பாடுகளை கோவில் குருக்கள் கணேஷ் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.