ADDED : மே 24, 2026 06:23 AM
புதுச்சேரி: டில்லி சென்ற அமைச்சர் நமச்சிவாயம் நேற்று புதுச்சேரி திரும்பினார்.
புதுச்சேரி மாநில அமைச்சராக பா.ஜ., வை சேர்ந்த நமச்சிவாயம் கடந்த 13ம் தேதி பதவியேற்றார். அமைச்சராக பொறுப்பேற்ற அவர், பா.ஜ., தலைவர்களை சந்தித்து வாழ்த்து பெற கடந்த 21ம் தேதி டில்லி சென்றார்.
அங்கு பா.ஜ., தேசிய தலைவர் நிதின் நபின், புதுச்சேரி பா.ஜ., தேர்தல் பொறுப்பாளரும், மத்திய அமைச்சருமான மன்சுக் மாண்டவியாவை சந்தித்து வாழ்த்து பெற்றார்.
தொடர்ந்து பிரதமர் மோடியை சந்தித்து வாழ்த்து பெற்று, புதுச்சேரி அரசியல் நிலவரம் குறித்து கலந்துரையாடினார்.
தொடர்ந்து, உள்துறை அமைச்சர் அமித்ஷா டில்லியில் இல்லாததால் அவருடன் தொலைபேசியில் பேசி வாழ்த்து பெற்றார்.
நேற்று துணை ஜனாதிபதி ராதாகிருஷ்ணனை மரியாதை நிமிர்த்தமாக சந்தித்து வாழ்த்து பெற்றார். மூன்று நாள் பயணத்தை முடித்துக் கொண்டு நேற்று அமைச்சர் நமச்சிவாயம் புதுச்சேரி திரும்பினார்.
