sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, ஏப்ரல் 04, 2026 ,பங்குனி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

புதுச்சேரியில் மார்க்சிஸ்ட்டும் தனித்து போட்டி

/

புதுச்சேரியில் மார்க்சிஸ்ட்டும் தனித்து போட்டி

புதுச்சேரியில் மார்க்சிஸ்ட்டும் தனித்து போட்டி

புதுச்சேரியில் மார்க்சிஸ்ட்டும் தனித்து போட்டி

9


UPDATED : மார் 26, 2026 05:43 PM

ADDED : மார் 26, 2026 05:37 PM

Google News

9

UPDATED : மார் 26, 2026 05:43 PM ADDED : மார் 26, 2026 05:37 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: புதுச்சேரியில் விசிகவை தொடர்ந்து மார்க்சிஸ்ட் கட்சியும் தனித்து களமிறங்குகிறது.

புதுச்சேரியில் காங்., -16; தி.மு.க., மற்றும் கூட்டணி கட்சிகள் 14 போட்டியிட பங்கீடு செய்யப்பட்டது. தி.மு.க., தனக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளில் மனு தாக்கல் செய்தவர்களுக்கு மட்டும் 'பி' படிவம் வழங்கியது. இதனால், பி படிவம் வழங்காதவர்களின் மனுக்கள் தள்ளுபடியாகின.

ஆனால், காங்., கட்சியினர் மனு தாக்கல் செய்த 22 தொகுதிகளிலும் 'பி' படிவத்துடன் தாக்கல் செய்துள்ளனர். இதனால் அனைவரின் மனுக்களும் ஏற்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், மார்க்சிஸ்ட் கட்சியும் 4 தொகுதிகளில் வேட்புமனு தாக்கல் செய்தனர். அதில் 2 தொகுதிகளில் வாபஸ் பெற்றனர்.லாஸ்பேட்டையில் ராஜாங்கம், திருபுவனையில் தட்சணமூர்த்தி போட்டியிடுவார்கள் என மார்க்சிஸ்ட் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.

இந்திய கம்யூ., விமர்சனம்

இந்நிலையில், தட்டாஞ்சாவடி தொகுதியில் போட்டியிட இந்திய கம்யூ., மாநில செயலர் சலீம் மனு தாக்கல் செய்திருந்தார். அதே தொகுதிக்கு காங்., மாநில செயலர் வைத்திலிங்கமும் மனு தாக்கல் செய்துள்ளது கூட்டணி கட்சியினர் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.இந்நிலையில், சலீம் தனது வேட்புமனுவை வாபஸ் பெற்றார்.

பிறகு அவர் கூறியதாவது: காங்கிரஸ் மற்றும் திமுகவுக்கு ஆதரவு இல்லை. காங்கிரஸ் கூட்டணி தர்மத்தை கடைபிடிக்கவில்லை. காங்., வைத்திலிங்கம் கூட்டணி தர்மத்தை மீறி வேட்புமனு தாக்கல் செய்தார். திமுகவும், காங்கிரசும் எதிரெதிராக போட்டியிடுவதால் கூட்டணி உடைந்துவிட்டது.

வேட்புமனு வாபஸ் நிறைவடைந்த நிலையில், திமுகவுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் வேட்புமனு தாக்கல் செய்த காங்கிரஸ் கட்சியினர் அதனை வாபஸ் பெறவில்லை.






      Dinamalar
      Follow us